நியூசிலாந்து அணியை வொய்ட் வாஷ் செய்து அபார வெற்றி பெற்ற இந்திய அணி!

0
593
Indvsnz

நியூசிலாந்தின் அணி தற்போது இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை எதிர்த்து விளையாடி வருகிறது!

இந்த ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளை இந்திய அணி வென்று ஏற்கனவே தொடரை கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தத் தொடரின் கடைசி போட்டி இன்று இந்தூர் மைதானத்தில் நடைபெற, போட்டிக்கான டாசில் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் லாதம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

- Advertisement -

பேட்டிங் செய்ய ஏதுவான இந்தூர் ஆடுகளத்தில் இந்தியத் துவக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா 101 ரன் மற்றும் சுப்மன் கில் 112 ரன் என இருவரும் அதிரடியாக விளையாடி சதம் அடித்து அசத்தினார்கள். இறுதியில் ஹர்திக் பாண்டியா 54 அதிரடியாக அரை சதம் அடிக்க, இந்திய அணி ஒன்பது விக்கெட்டுகள் இழப்பிற்கு 385 ரன்கள் எடுத்தது.

இதற்கு அடுத்து களம் கண்ட நியூஸிலாந்து அணிக்கு ஹர்திக் பாண்டியா ஆட்டத்தின் முதல் ஓவர் இரண்டாவது பந்திலேயே பின் ஆலன் விக்கட்டை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். ஆனால் மற்றொரு துவக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வோ நூறு பந்துகளுக்கு 138 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தினார்.

ஆனால் நடுவில் பந்தை கையில் எடுத்த இந்திய அணியின் சர்துல் தாக்கூர் நியூசிலாந்து அணியின் டேரில் மிட்சல், டாம் லாதம், கிளன் பிலிப்ஸ் என மூவர் விக்கட்டையும் அடுத்தடுத்து வீழ்த்தி இந்திய அணியின் வெற்றியை எளிதாக்கினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து ஒரு முனையில் குல்தீப் யாதவ் தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் நியூசிலாந்து அணியின் விக்கட்டுகளை சரித்தார். இறுதியில் 41.2 ஓவரில் நியூசிலாந்து அணி 295 ரன்கள் எடுத்து சுருண்டது.

இதை அடுத்து இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றி அசத்தி இருக்கிறது. இந்திய அணி தரப்பில் சர்துல் தாக்கூர் மூன்று விக்கட்டுகள், உம்ரான் மாலிக் மற்றும் குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.