147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாறு.. இந்தியா 10.1 ஓவரில் மெகா சாதனை.. ஜெய்ஸ்வால் ருத்ர தாண்டவம்

0
521
Jaiswal

பங்களாதேஷ் அணிக்கு எதிராக இந்திய அணி பேட்டிங் செய்ய வந்த பத்தாவது ஓவரில் இரண்டு பெரிய உலக சாதனைகளை படைத்து அசத்தியிருக்கிறது.

இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி முதல் மூன்று நாட்கள் மழையால் பாதிக்கப்பட, இன்று மழை இல்லாத காரணத்தினால் நான்காவது நாள் போட்டி நடைபெற்றது. மோமினுல் ஹக் ஆட்டம் இழக்காமல் 107 ரன்கள் எடுக்க, பங்களாதேஷ் அணி 233 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

- Advertisement -

முதலில் சாதனை படைத்த ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால்

இதைத்தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை அதிரடியாக ஆடினால் மட்டுமே இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு ஏதாவது சிறிய வாய்ப்புகள் இருக்கும் என்கின்ற நிலை காணப்பட்டது. ஆனால் இந்திய அணி அந்த ரிஸ்க்கை எடுக்குமா? என்கின்ற சந்தேகமும் இருந்தது.

இப்படியான நிலையில் உள்ளே வந்த ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா வெறும் மூன்று ஓவர்களில் 50 ரன்கள் எடுத்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 ரன்கள் எடுத்த அணி என்ற உலக சாதனையை படைத்தது. இந்த நிலையில் ரோஹித் சர்மா 11 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

10.1 ஓவரில் இன்னொரு உலகச் சாதனை

இதற்கடுத்து ஜெய்ஸ்வால் மற்றும் சுக்குமன் கில் இருவரும் ஜோடி சேர்ந்தார்கள். இந்த ஜோடியும் அதிரடியை நிறுத்தாமல் அப்படியே தொடர்ந்தது. சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் 31 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் அதிரடியாக அரை சதம் அடித்தார்.

இந்த ஜோடி தொடர்ந்து அதிரடியாக விளையாட இந்திய அணி 10.1 ஓவரில் 100 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் அதிவேகமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் 100 ரன்கள் எடுத்த அணி என்கின்ற உலகச் சாதனையையும் இந்திய அணி படைத்தது.

இதையும் படிங்க : வெறும் 3 ஓவர்கள்.. ரோகித் சர்மா ஜெய்ஸ்வால் அதிரடி உலக சாதனை.. புரியாமல் நின்ற பங்களாதேஷ் பவுலர்கள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 ரன்கள் அடித்த அணிகள்

10.1 ஓவர் – இந்தியா – பங்களாதேஷ் – கான்பூர் – 2024
12.2 ஓவர் – இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் – போர்ட் ஆஃப் ஸ்பெயின் – 2023
13.1 ஓவர் – இலங்கை – பங்களாதேஷ் – கொழும்பு – 2001
13.4 ஓவர் – பங்களாதேஷ் – வெஸ்ட் இண்டீஸ் – மிர்பூர் – 2012
13.4 ஓவர்- இங்கிலாந்து – பாகிஸ்தான் – கராச்சி 2022
13.4 ஓவர் – இங்கிலாந்து – பாகிஸ்தான் – ராவல்பிண்டி 2022
13.6 ஓவர் – ஆஸ்திரேலியா – இந்தியா – பெர்த் – 2012

- Advertisement -