வெறும் 3 ஓவர்கள்.. ரோகித் சர்மா ஜெய்ஸ்வால் அதிரடி உலக சாதனை.. புரியாமல் நின்ற பங்களாதேஷ் பவுலர்கள்

0
1355
Rohit

இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே கான்பூரில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா 147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை படைத்திருக்கிறார்கள்.

இந்த டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் 34 ஓவர்கள் பந்து வீசப்பட்டு இருந்தது. இதற்கு அடுத்த இரண்டு நாட்களிலும் ஒரு பந்து கூட வீசப்படாமல் மழையின் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது. இதனால் போட்டி பெரும்பாலும் டிராவில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் வேறு திட்டத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

- Advertisement -

ஆல் அவுட் ஆன பங்களாதேஷ்

முதல் நாளில் மூன்று விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்திருந்த பங்களாதேஷ் நான்காவது நாள் தொடர்ந்து விளையாடியது. பங்களாதேஷ் அணிக்கு மற்ற வீரர்கள் வருவதும் போவதுமாக இருக்க, அந்த அணிக்கு மூன்றாவது இடத்தில் வந்த மோமினுல் ஹக் சிறப்பாக விளையாடி சதம் அடித்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 194 பந்துகளில் 107 ரன்கள் எடுத்தார்.

பங்களாதேஷ் அணி இறுதியாக 233 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் தரப்பில் பும்ரா மூன்று, ஆகாஷ் தீப் மற்றும் முகமது சிராஜ் இருவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள். மேலும் ரவிச்சந்திர டாஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

ரோகித் சர்மா ஜெய்ஸ்வால் உலகச் சாதனை

இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் அதிரடியான துவக்கத்தை தந்தார்கள். முதல் ஓவரில் ஜெய்ஸ்வால் 3 பவுண்டரிகள் அடித்தார். இதைத்தொடர்ந்து இரண்டாவது ஓவரை சந்தித்த ரோகித் சர்மா அடுத்தடுத்த இரண்டு பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள் அடித்தார்.

இதையும் படிங்க : 233 ரன்.. 92 வருட வரலாற்றில் ஜடேஜா முதல் வீரராக சாதனை.. பங்களாதேஷ் அணி ஆல் அவுட் – கான்பூர் டெஸ்ட்

இந்த ஜோடி மொத்தம் வெறும் மூன்று ஓவர்களில் 51 ரன்கள் அடித்தது. 147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக அடிக்கப்பட்ட முதல் 50 ரன்கள் என்கின்ற உலக சாதனையை ரோதித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஜோடி படைத்திருக்கிறது. இறுதியாக ரோகித் சர்மா 11 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். துவக்க ஜோடி 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

- Advertisement -