பாகிஸ்தான் ஆஸியை தாண்டி.. இந்திய அணி படைத்த வித்தியாசமான சாதனை.. விடாது தொடரும் வினோதம்

0
2532
ICT

நேற்று இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடிய முதல் ஒருநாள் போட்டி டை ஆனது. போட்டியில் இந்த முடிவால் இந்திய அணி வித்தியாசமான சாதனை படைத்து ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தானை தாண்டியிருக்கிறது.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்று இலங்கை தைரியமாக பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணிக்கு பதும் நிஷாங்கா மற்றும் வெல்லாலகே இருவரும் அரை சதம் அடிக்க எட்டு விக்கெட் இழப்புக்கு 50 ஓவர்களில் அந்த அணி 230 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 15 பந்துகளில் கைவசம் இரண்டு விக்கெட்டுகள் இருக்க ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்து, அங்கிருந்து இரண்டு விக்கெட்டுகளையும் இழந்து, வெல்ல வேண்டிய போட்டியை டை ஆக்கிக் கொண்டது.

நேற்று இலங்கை அணிக்கு எதிராக விளையாடிய இந்திய அணியில் வழக்கமாக விளையாடும் ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா, பும்ரா என மூவர் மட்டுமே இல்லை. ஆனால் இந்திய அணியின் பேட்டிங் யூனிட் மிக வலிமையாகவே இருந்தது. இப்படி இருந்தும் 230 ரன்களை இந்திய அணி எட்ட முடியவில்லை என்பது ஏமாற்றமாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் இந்திய அணிக்கு இது பத்தாவது முறையாக டை ஆன போட்டியாக அமைந்திருக்கிறது. இந்த வகையில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளை தாண்டி, ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக டை போட்டிகளில் விளையாடிய அணியாக இந்திய அணி இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த பட்டியலில் 11 டை போட்டிகள் உடன் வெஸ்ட் இண்டீஸ் முதல் இடத்தில் இருக்கிறது.

இதையும் படிங்க : கோலி கூட நட்பு எனக்கு இப்படிதான்.. என்ன இந்த ஒரு விஷயம் மட்டும் வேடிக்கையா இருக்கும் – தோனி பேச்சு

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக டை போட்டிகளை சந்தித்த 6 அணிகள் :

வெஸ்ட் இண்டீஸ் – 11
இந்தியா – 10
ஆஸ்திரேலியா – 9
இங்கிலாந்து – 9
பாகிஸ்தான் – 9
ஜிம்பாப்வே – 8

இந்த நிலையில் நாளை இரண்டாவது ஒரு நாள் போட்டி நடைபெறுகிறது. ஒன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் என்கின்ற காரணத்தினால் இந்திய அணி அடுத்து இரண்டு போட்டிகளையும் வெல்ல வேண்டி இருக்கிறது. 1997 ஆம் ஆண்டு முதல் ஒருநாள் கிரிக்கெட் தொடரை இலங்கை அணி இடம் இந்திய அணி இழந்தது கிடையாது. எனவே இந்திய அணி இந்த பெருமையை காப்பாற்ற வேண்டிய அழுத்தத்தில் இருக்கிறது!

- Advertisement -