இந்திய கிரிக்கெட்டின் மிகச்சிறந்த கேப்டனான மகேந்திர சிங் தோனிக்கு போட்டியில் வலது கையாக இருந்தவர் விராட் கோலி. பின் நாட்களில் விராட் கோலி கேப்டன் ஆன பிறகு தோனியும் விராட் கோலிக்கு களத்தில் மிகுந்த ஒத்துழைப்பை கொடுத்தார். இந்த நிலையில் விராட் கோலிவுடனான தனது நட்பு எப்படியானது? என்று மகேந்திர சிங் தோனி கூறி இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட்டில் கேப்டன் மற்றும் எந்தவித அதிர்வையும் உருவாக்காமல் மிக சுமூகமாக இருந்தது என்றால் தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து நகர்ந்து விராட் கோலி கேப்டனாக வந்த பொழுது மட்டும்தான். ஏனென்றால் தனக்குப் பிறகு அடுத்த கேப்டனாக விராட் கோலியை நீண்ட வருடங்களுக்கு முன்பாகவே கொண்டு வந்து நிலை நிறுத்தி, நல்ல நட்பை உருவாக்கி தோனி வைத்திருந்தார். இதனால் கேப்டன் மற்றும் அணியில் எந்த அதிர்வையும் உருவாக்கவில்லை.
மேலும் மகேந்திர சிங் தோனி கேப்டன் பொறுப்பில் இருந்த காலகட்டத்தில், குறிப்பாக சச்சின் சேவாக் போன்ற முன்னணி பேட்ஸ்மேன்கள் இல்லாத காலகட்டத்தில் விராட் கோலி இயந்திரம் போல ரன்கள் குவித்து கேப்டனாக தோனி போட்டிகளை வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்.
இருவரும் சேர்ந்து பேட்டிங் செய்யும்பொழுது அது இந்திய ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஒரு அனுபவமாகவே அமைந்திருக்கிறது. களத்தில் அவர்கள் இருவரும் காட்டிய ஆற்றல் மற்றும் புத்திசாலித்தனம் அடுத்து வரக்கூடிய இளைஞர்களுக்கு ஒரு பாடமாகவே இருக்கிறது. இந்த நிலையில் தோனி தனக்கு விராட் கோலி உடனான நட்பு எப்படி தொடர்ந்து கொண்டிருக்கிறது? என்பது குறித்து கூறியிருக்கிறார்.
இதுகுறித்து தோனி கூறும்பொழுது “நாங்கள் நீண்ட காலம் இந்திய அணிக்காக விளையாடிய ஊழியர்களாக இருந்திருக்கிறோம். உலக கிரிக்கெட்டில் விராட் கோலியை பொறுத்தவரை சிறந்த வீரர்களில் அவரும் ஒருவர். மேலும் மிடில் ஓவர்களில் நான் அவருடன் அதிக முறை பேட்டிங் செய்தது உண்மை. அப்பொழுது நிறைய வேடிக்கையாக நிகழ்ந்திருக்கிறது. ஏனென்றால் நாங்கள் மிக வேகமாக இரண்டு மற்றும் மூன்று ரன்கள் ஓடி எடுப்போம். எனவே அது வேடிக்கையானதாக இருக்கும்.
இதையும் படிங்க : சூரியகுமார் பந்துவீச தடை போட்ட சிஎஸ்கே மேட்ச்.. 9 வருட ரெட் அலர்ட்.. கடைசியில் சாதித்த கதை
ஆனால் நாங்கள் இப்பொழுது அடிக்கடி சந்தித்துக் கொள்ள முடிவது கிடையாது. ஆனால் நாங்கள் எப்பொழுது சந்தித்துக் கொண்டாலும் உரையாடலை நடத்தும் அளவுக்கு எங்கள் நட்பு இருக்கிறது. மேலும் இப்படி நாங்கள் சந்தித்துக் கொள்ளும் பொழுது தற்பொழுது வாழ்க்கையில் என்ன சென்று கொண்டிருக்கிறது? என்பது குறித்து பேசிக் கொள்வோம். இதுதான் எங்களுடைய இருக்கும் உறவு!” எனக் கூறியிருக்கிறார்.






