2026 டி20 WC.. இந்திய அணி அறிவிப்பு.. கில் அதிரடி நீக்கம்.. 2 புதிய வீரர்களுக்கு வாய்ப்பு – சற்றுமுன் வெளியான பட்டியல்

0
26
Gill

அடுத்த வருடம் 2026ல் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்திய அணி டி20 உலக சாம்பியன் ஆக இருப்பதாலும் மேலும் உலகக் கோப்பைத் தொடர் இந்தியாவில் நடைபெற இருப்பதாலும் கோப்பையை வெல்ல வேண்டிய நெருக்கடி இருக்கிறது. இந்த சூழ்நிலையில் அணியில் நிலவி வந்த சில குழப்பங்களுக்கு தெளிவாக பதில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

கில் அதிரடி நீக்கம்

இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக இருந்து வந்த சுப்மன் கில் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். இந்த முடிவு இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதே சமயத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது.

மேலும் இன்னொரு அதிரடி நீக்கமாக ஏற்கனவே இந்திய டி20 அணியில் இரண்டாவது விக்கெட் கீப்பர் இடத்தில் விளையாடி வந்த ஜிதேஷ் சர்மா நீக்கப்பட்டிருக்கிறார். இவருடைய இடத்திற்கு சில நாட்களுக்கு முன்பு சையத் முஸ்டாக் அலி தொடரை வென்ற ஜார்க்கண்ட் அணியின் கேப்டன் இசான் கிஷான் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

பினிஷர் மீண்டும் சேர்ப்பு

கடந்த தொடரில் அணியிலிருந்து நீக்கப்பட்டு இருந்த ரிங்கு சிங் மீண்டும் இந்திய டி20 அணிக்கு திரும்பியிருக்கிறார். இதன் காரணமாக இந்திய அணியின் பேட்டிங் யூனிட் மிகவும் பலமானதாக மாறி இருக்கிறது. இத்துடன் சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களாக அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இடம் பெற்று இருக்கிறார்கள். வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா மற்றும் சிவம் துபே இருக்கிறார்கள்.

மேலும் இந்த அணியில் வேகப்பந்து வீச்சு யூனிட்டில் பும்ரா, ஹர்ஷித் ராணா மற்றும் அர்ஸ்தீப் ஆகியோர் இருக்கிறார்கள். பேட்டிங் யூனிட்டில் வழக்கம் போல் அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, சூரியகுமார் யாதவ் ஆகியோர் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க : கம்பீர் என்ன செய்ய நினைக்கிறாருனு எனக்கு நல்லா தெரியும்.. இங்க இதான் முக்கியம் – சஞ்சு சாம்சன் பேச்சு

சூர்ய குமார் யாதவ் (கே)
ஜஸ்பிரித் பும்ரா
அபிஷேக் சர்மா
ஹர்ஷித் ராணா
சஞ்சு சாம்சன் (விகீ)
அர்ஷ்தீப் சிங்
திலக் வர்மா
குல்தீப் யாதவ்
ஹர்திக் பாண்டியா
வருண் சக்கரவர்த்தி
சிவம் துபே
வாஷிங்டன் சுந்தர்
அக்ஸர் படேல் (துகே)
இஷான் கிஷான் (விகீ)
ரிங்கு சிங்

- Advertisement -