நேற்று தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் விளையாட வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் தற்போது அணியில் என்ன மாதிரியான யோசனைகள் சென்று கொண்டிருக்கிறது என்பது குறித்து அவர் பேசியிருக்கிறார்.
இந்திய டி20 அணிக்கு துணை கேப்டனாக கில் கொண்டுவரப்பட்டதும் அவரையே துவக்க ஆட்டக்காரராகவும் மாற்றினார்கள். இதனால் மூன்று சதங்கள் அடித்திருந்த சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதே சமயத்தில் கில் சரியாகவும் விளையாடவில்லை.
சாம்சனின் முக்கியத்துவம்
நேற்று காலையில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக கில் விளையாட முடியாமல் போக சஞ்சு சாம்சன் களமிறங்கினார். மொத்தம் 22 பந்துகளை சந்தித்த அவர் 37 ரன்கள் எடுத்தார். இதில் நான்கு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் அடக்கம். மேலும் ஒரு சிறந்த பந்தில் ஆட்டம் இழந்தார்.
இதற்கு முன்பாக கில் மற்றும் சூரியகுமார் இருவரும் பாமில் இல்லாததால் விக்கெட்டுகளை கொடுத்தார்கள். அபிஷேக் ஷர்மா அதிரடியாக ஆடுவதால் அவர் விக்கெட் உத்திரவாதம் இல்லாமல் இருக்கிறது. நேற்று சஞ்சு சாம்சன் 22 பந்துகளை சந்தித்து விளையாடியதால் இந்திய அணி விக்கெட் இழக்காமல் 50 ரன்கள் தாண்டி எடுக்க அது நல்ல தொடக்கத்திற்கு வழிவகுத்தது.
இதுதான் முக்கியமானது
நேற்று போட்டி முடிவுக்கு பிறகு பேசி உள்ள சஞ்சு சாம்சன் கூறும்பொழுது “அடுத்து பெரிய தொடரான டி20 தொடர் வர இருக்கின்ற காரணத்தினால், தற்போது அணியின் சூழல் மிகவும் முக்கியமானது. இந்திய அணி நிர்வாகம் என்ன செய்ய முயற்சி செய்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்கு நான் அதிக காலம் அவர்களுடன் இருந்து வருகிறேன். நான் மிகவும் அனுபவம் வாய்ந்தவன் என்பதால் தலைமை குழு என்ன செய்ய நினைக்கிறார்கள்? என்று எனக்கு நன்றாக தெரியும்”
இதையும் படிங்க : 228 ரன் 4 விக்கெட்.. இங்கிலாந்து வெல்லுமா?.. ஹெட் ருத்ரதாண்டவம்.. லயன் திருப்புமுனையில் ஆஸி முன்னிலை
“பயிற்சியாளர் கம்பீர் மற்றும் கேப்டன் சூரியகுமார் யாதவ் இருவருடனும் எனக்கு நல்ல உறவு இருக்கிறது. எனவே நான் அவர்களுடன் தொடர்பு கொள்வது என்பது மிகவும் வெளிப்படையாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.






