“இந்திய அணி இந்த தந்திரத்தை செய்ய தவறிவிட்டது” – பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனிரியா!

0
188

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாளான இன்று இந்திய அணி சிறப்பாக விளையாடி 238 ரன்களுக்கு இரண்டு விக்கெட்களை இழந்துள்ளது. சுப்மன் கில் 127 ரண்களுடனும் விராட் கோலி 31 ரன்கள்டனும் சிறப்பாக ஆடி வருகின்றனர்.

முன்னதாக முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி உஸ்மான் கவாஜா மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 480 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அஸ்வின் சிறப்பாக பந்து வீசி ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றினார். முகமது சமி இரண்டு விக்கெட்டுகளையும் ரவீந்திர ஜடேஜா மற்றும் அச்சர் பட்டேல் ஆகியோர் இப்ப நான் ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

- Advertisement -

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் டேனிஷ் கனிரியா ரவிச்சந்திரன் அஸ்வினை தவிர இந்திய அணியின் எந்த பந்துவீச்சாளர்களும் சரியாக பந்து வீச்சில் ஈடுபடவில்லை என குற்றம் சாட்டியிருக்கிறார். இதுகுறித்து தனது youtube சேனலில் பேசி இருக்கும் அவர் இந்திய பந்துவீச்சாளர்களின் குறைகளை சுட்டிக்காட்டி உள்ளார் .

இது குறித்து பேசி இருக்கும் கனிரியா” முகமது சமி மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் எதிர்பார்த்த அளவு சிறப்பாக பந்து வீசவில்லை. ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோரும் ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார். இதன் காரணமாக கேப்டன் ரோஹித் சர்மா ஷ்ரேயாஸ் ஐயரின் பந்துவீச்சையும் நாட வேண்டி இருந்தது எனக் குறிப்பிட்டார் .

மேலும் இது பற்றி தொடர்ந்து பேசிய அவர் ” இந்திய அணி இந்தப் போட்டியில் ஒரு தந்திரத்தை தவற விட்டு விட்டது . இந்தப் போட்டிக்கு குல்தீப் யாதவ் அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் . இந்த ஆடுகளத்தில் பந்து வீச்சுக்கு அவ்வளவு சாதகமாக இல்லை என்றாலும் குல்தீப் யாதவ் அணியில் இடம் பெற்று இருந்தால் அது இந்திய அணிக்கு நிச்சயமாக ஒரு நல்ல மாற்றமாக அமைந்திருக்கும் “என்று கூறினார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” ரவிச்சந்திரன் அஸ்வின் மிகச் சிறப்பாக செயல்பட்டார். நீண்ட நேரம் பந்து வீசி அதிக ரன்களை விட்டுக் கொடுக்காமல் ஆரம்பிக்கெட்டுகளை கைப்பற்றியது அவரது சிறப்பான திறமையை காட்டுகிறது என்று கூறினார். மேலும் ரவிச்சந்திரன் அஸ்வினை தவிர இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சாதாரணமாகவே செயல்பட்டனர் எனக் கூறி முடித்தார் டேனிஷ் கனிரியா