தென்ஆப்பிரிக்க அணியை 106 ரன்களுக்கு சுருட்டியது இந்திய அணி; வீடியோ இணைப்பு!

0
261
Ind vs Sa

ஆஸ்திரேலியா அணி பயணம் முடிந்து தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாட இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது. இந்த தொடருக்கு இந்திய அணியில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஓய்வில் இருந்த அர்ஸ்தீப் சிங் அணிக்கு திரும்பி இருக்கிறார்.

முதலில் டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீசுவது என்று தீர்மானித்தார். இந்திய அணியில் சாகல், ஹர்திக் பாண்டியா, பும்ரா இடத்திற்கு அஸ்வின், தீபக் சஹர், அர்ஸ்தீப் மற்றும் பிஷாப் அண்ட் ஆகியோர் வந்திருந்தனர்.

- Advertisement -

இந்தப் போட்டி தொடங்கியதும் தென் ஆப்பிரிக்க அணிக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரின் கடைசி பந்தில் தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பாவுமாவை தீபக் சஹர் கிளீன் போல்ட் செய்தார். அடுத்த ஓவரை அர்ஸ்தீப் வீச, அந்த ஓவரின் முதல் பந்தில் குயின்டன் டி காக், ஐந்தாவது பந்தில் ரூசோ, ஆறாவது பந்தில் டேவிட் மில்லர் என மூன்று பேரும் ஆட்டமிழந்து வெளியேறினார்கள். இதையடுத்து தென்ஆப்பிரிக்கா அணி 8 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் விழுந்தது. இளம் இடக்கை வேகப்பந்துவீச்சாளர் அர்ஸ்தீப் ஆட்டத்தில் தனது முதல் ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஹர்சல் படேல் தனது முதல் ஓவரில் எய்டன் மார்க்ரம்மை வெளியேற்றினார்.

20 ஓவர்களின் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 106 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் தீபக் சஹர் 4 ஓவர்கள் வீசி 24 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், அர்ஸ்தீப் 4 ஓவர்கள் வீசி 32 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும்,ஹர்சல் படேல் 4 ஓவர்கள் பந்துவீசி 26 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். தென் ஆப்பிரிக்கா தரப்பில் கேஷவ் மஹராஜ் 35 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.