வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடாமல் திடீரென்று நாடு திரும்பும் இந்திய நட்சத்திர வீரர் ; ரசிகர்கள் ஏமாற்றம்!

0
10258
ICT

இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் நவம்பர் மாதத்தில் நடக்க இருக்கின்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்க்பைகான தயாரிப்புகளுக்கு, இன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தொடங்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்!

இந்திய அணி நிர்வாகம் தற்பொழுது பேட்டிங் யூனிட்டில் நான்காவது இடத்திற்கும், இரண்டாவது விக்கெட் கீப்பரையும் கண்டறிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் காயம் அடைந்துள்ளது இந்தியா அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

எனவே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இப்படியான பரிசோதனை முயற்சிகள் நடைபெறும். தற்பொழுது இரண்டாவது விக்கெட் கீப்பருக்கான இடத்திற்கு சஞ்சு சாம்சன் மற்றும் இசான் கிஷான் இருவரும் போட்டியிட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே இந்திய அணியின் நட்சத்திர மற்றும் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் முகமது சமிக்கு, உலகக்கோப்பையை மனதில் வைத்து பணிச்சுமையை குறைக்கும் விதமாக ஓய்வு அளிக்கப்பட்டது. அதே சமயத்தில் இந்திய வேகப்பந்துவீச்சுப் படையை டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் முகமது சிராஜ் வழிநடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டது.

தற்பொழுது காயத்திலிருந்து மீண்டு வரும் பும்ரா நிலைமை என்னவென்று சரியாகத் தெரியாத சூழ்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகமது சிராஜுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முழுமையாக ஓய்வு அளிக்கப்பட்டு அவர் நாடு திரும்பியிருக்கிறார். ஒருநாள் தொடருக்குப் பிறகு நடக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் அவர் பெயர் ஏற்கனவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

முகமது சிராஜ் தொடர்ச்சியாக இலங்கை, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா என டெஸ்ட் தொடர்களில் இந்திய அணிக்காக விளையாடி வந்தார். மேலும் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் முழுமையாக பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காகவும் விளையாடியிருந்தார். மேலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடி, வெஸ்ட் இண்டீஸ் வந்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றார்.

இப்படி தொடர்ச்சியாக விளையாடிக் கொண்டிருக்கும் முகமது சிராஜிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருப்பது அதுவும் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக ஓய்வு அளிக்கப்பட்டு இருப்பது சரியான முடிவாகவே பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில் பும்ரா நம்பிக்கை அளிக்கக் கூடிய விதத்தில் இருந்திருந்தால் முகம்மது சிராஜிக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்காது எனவும் சொல்லப்படுகிறது. இதனால் பும்ரா நல்ல உடல் தகுதியில் இல்லை என்றும் அஞ்சப்படுகிறது.

தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடருக்கான இந்திய வேகப்பந்து வீச்சு யூனிட்டில் சர்துல் தாக்கூர், உம்ரான் மாலிக், முகேஷ் குமார், ஜெயதேவ் உனட்கட் ஆகியோர் இருக்கிறார்கள். மேலும் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் இருக்கிறார். முகமது சிராஜ் தற்பொழுது விலகி இருப்பது உம்ரான் மாலிக் 3 ஆட்டங்களிலும் விளையாடுவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும்.