முதல் டெஸ்ட் தோல்வி எதிரொலி.. பிசிசிஐ WTC பைனலுக்காக அதிரடி முடிவு.. கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சனம்

0
716

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற 24-ஆம் தேதி புனேவிலுள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில் இந்த போட்டிக்காக இரண்டு அணி வீரர்களும் மிகத் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் முதல் போட்டியில் அடைந்த தோல்வியை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் நிர்வாகம், தனது பழைய பார்முலாவை திரும்பவும் கையில் எடுத்திருக்கிறது.

- Advertisement -

முதல் டெஸ்டில் எதிர்பாராத தோல்வி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற சொந்த மண்ணில் நடைபெறும் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஐந்து போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு தகுதி வெற்றி விடும் என்ற சூழ்நிலையில் எதிர்பாராத விதமாக முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணி இனி வரும் அடுத்த போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டியது அவசியம். ஒருவேளை அடுத்த இரண்டு போட்டிகளில் இந்திய அணிக்கு சாதகமான முடிவு கிடைக்கவில்லை என்றால் அடுத்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் ஐந்தில் நான்கு போட்டிகளில் கட்டாயமாக வெற்றி பெற வேண்டிய சூழ்நிலைக்கு இந்தியா ஆளாகும். எனவே சூழ்நிலையை கருத்தில் கொண்ட இந்திய கிரிக்கெட் நிர்வாகம் திரும்பவும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானத்தை தயார் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

- Advertisement -

பழைய ஃபார்முலாவை கையில் எடுத்த இந்தியா

பெங்களூரு ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்த நிலையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகளில் வெற்றி பெற இந்தியா தனது வலுவான சுழற் பந்துவீச்சை வைத்து வெற்றி பெற முடிவு செய்திருக்கிறது. இதனால் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் தடுமாறும் வகையில் ஆடுகளம் அமைக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இந்தியா சமீப காலங்களில் இந்தியாவில் நடுநிலைத் தன்மையுடன் அமைக்கப்பட்ட ஆடுகளங்களில் விளையாடியதால் வெளிநாடுகளுக்கு எதிரான தொடர்களில் வெற்றி பெற்று தங்களது முத்திரையை பதித்தது.

இதையும் படிங்க:பிசிசிஐ ரொம்ப ஓவர்.. இந்த டி20 தொடர் தேவையா.? இப்படி இருந்தா எப்படி உள்நாட்டு கிரிக்கெட் வளரும் – சுனில் கவாஸ்கர் விமர்சனம்

இந்த சூழ்நிலையில் திரும்பவும் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் தயாரித்து பழைய ஃபார்முலாவுக்கு திரும்பினால் அது இந்திய அணிக்கு வெளிநாட்டு தொடர்களில் சிக்கலை ஏற்படுத்தும் நிலையும் இருக்கிறது. எனவே தற்போது இந்திய அணியின் இந்த செயல் நடுநிலையான கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -