ஐசிசி வைத்த சூடு.. இந்திய அணிக்கு கொண்டாட்டம் .. கடும் கோபத்தில் ஆஸ்திரேலியா வீரர் கவாஜா

0
996
Kavaja

மிக வேகமாக மாறிவரும் கிரிக்கெட்டில், உண்மையான கிரிக்கெட் வடிவமான டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்றும் பொருட்டு ஐசிசி இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை நடத்தி வருகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை இரண்டு தொடர்கள் நடைபெற்றிருக்கின்றன. இரண்டு தொடர்களிலும் இறுதி போட்டிக்கு சென்ற இந்திய அணி சாம்பியன்ஷிப்பை இழந்தது. முதலில் நியூசிலாந்தும் தற்போது ஆஸ்திரேலியாவும் வென்று இருக்கின்றன.

- Advertisement -

இந்த நிலையில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஓட்டம் ஆரம்பித்து இருக்கிறது. இதில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியையும், பாகிஸ்தான் அணி இலங்கை அணியும், ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து அணியையும் முதல் தொடரில் சந்தித்து விளையாடின.

பாகிஸ்தான் அணி இலங்கை உடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இரண்டையும் வென்று இருக்கிறது. இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு போட்டியை வென்று ஒரு போட்டியில் மழையால் டிரா ஆகி இருக்கிறது. இதே போல் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதிய இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகள் தலா இரண்டு போட்டிகளை வெல்ல மழையால் ஒரு போட்டியில் டிராவாகி உள்ளது.

இந்த நிலையில் தான் இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகளின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளியில் ஐசிசி கை வைத்து உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் மெதுவாக பந்து வீசினால் அணிகளுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு, டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலிலும் புள்ளிகள் குறைக்கப்படும் என்று ஐசிசி தெரிவித்திருந்தது. தற்பொழுது அந்த நடைமுறையால் இரண்டு அணிகளுமே பாதிக்கப்பட்டு இருக்கின்றன.

- Advertisement -

ஒரு டெஸ்டில் ஒரு நாளில் எத்தனை ஓவர்கள் குறைவாக பந்து வீசுகிறார்களோ அத்தனை புள்ளிகள் குறைக்கப்படும். இந்த வகையில் ஒட்டுமொத்தமாக சேர்த்து இங்கிலாந்து அணி 19 ஓவர்களை குறைவாக வீசி இருந்தது. இதற்காக அந்த அணியின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 19 புள்ளிகளை அதிரடியாக ஐசிசி குறைத்திருக்கிறது.

இதே போல ஆஸ்திரேலியா அணி கடைசி டெஸ்டில் மட்டும் 10 ஓவர்களை தாமதமாக வீசி இருந்தது. இதன் காரணமாக ஆஸ்திரேலியா அணியின் புள்ளியிலும் 10 புள்ளிகளை ஐசிசி குறைத்திருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி வருகின்ற வகையில் திறமையோடு இருக்கின்ற இந்த இரண்டு அணிகளும் தற்பொழுது 29 புள்ளிகளை சேர்த்து இழந்து இருப்பது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஓட்டத்தில் பாகிஸ்தான் அணி 12 புள்ளிகள் உடன் முதல் இடத்தில் இருக்கிறது. இந்தியா 16 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. தற்பொழுது மூன்றாவது இடத்தில் 18 புள்ளிகள் உடன் ஆஸ்திரேலியாவும், 4 புள்ளிகள் எடுத்து இருந்தாலும் வெற்றி தோல்வி சதவீதத்தின் அடிப்படையில் வெஸ்ட் இண்டீஸ் நான்காவது இடத்திலும், இங்கிலாந்து அணி பரிதாபமாக ஒன்பது புள்ளிகள் உடன் ஐந்தாவது இடத்திலும் இருக்கிறது.

ஐசிசியின் இந்த நடவடிக்கை குறித்து கடுமையாக கோபம் அடைந்திருக்கும் கவாஜா கவாஜா தன்னுடைய ட்வீட்டில் “மான்செஸ்டரில் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் மழை பெய்து வந்தது. எனவே அங்கும் ஆஸ்திரேலியா அணி நேரத்திற்குப் பந்து வீசவில்லை என்று கூறி அபராதம் விதித்து அதற்கும் சேர்த்து தரப்பட்டிருக்கும் 10 புள்ளிகளையும் ஐசிசி சேர்த்து எடுத்துக் கொள்ளட்டும்!” என்று கோபமாக கூறியிருக்கிறார்!