அமெரிக்க டி20 அணியில் நியூசி நட்சத்திர வீரர்.. இந்திய வீரர் உன்முக்த் சந்த் உலககோப்பை கனவு முடிந்தது

0
529
Corey

இந்தியாவில் ஐபிஎல் தொடர் மே 26 ஆம் தேதி முடிந்து, அடுத்து ஜூன் மாதம் தொடக்கத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கு பெறுகின்றன. தொடரை நடத்துகின்ற காரணத்தினால் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் என இரு அணிகளும் நேரடியாகத் தகுதிப் பெற்று இருக்கின்றன.

வெஸ்ட் இண்டீஸ் அணி இதற்காக முன்னணி வீரர்கள் அனைவரையும் உள்ளே கொண்டு வந்து, இரண்டு முறை டி20 உலகக்கோப்பையை வென்ற முன்னாள் கேப்டன் டேரன் சாமியை பயிற்சியாளர் ஆக்கி, மிகச் சிறப்பாக தயாராகி வருகிறது. இந்த முறை மற்ற எல்லா பெரிய அணிகளுக்கும் முன்பு போல வெஸ்ட் இன்டிஸ் அணி சவால் கொடுக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது.

- Advertisement -

இதேபோல் சிறிய அணியான அமெரிக்காவும் தங்கள் நாட்டில் நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பையில் குறிப்பிடத்தக்க வகையில் செயல்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. மேலும் சில ஆண்டுகளாக அமெரிக்காவில் கிரிக்கெட்டை வளர்ப்பதற்கு பெரும் முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மேஜர் லீக் கிரிக்கெட் என்ற பெயரில் புதிய டி20 தொடர் அறிமுகப்படுத்தப்பட்டு, அதில் நான்கு ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் அணிகளை வாங்கியும் இருந்தார்கள்.

தற்போதைக்கு அமெரிக்க அணி இந்திய வம்சாவளி மற்றும் பிற நாடுகளில் கிரிக்கெட் விளையாடிய முன்னாள் வீரர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது. மிகக்குறிப்பாக அமெரிக்க கிரிக்கெட் அணியை பொறுத்தவரையில் இந்திய வம்சாவளி வீரர்களின் ஆதிக்கம் பெரிய அளவில் இருக்கிறது. அவர்களின் அணியை பார்த்தால் இந்திய உள்நாட்டு அணி போல் தோன்றும்.

இந்த நிலையில் இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்று குடியேறிவிட்ட 2012 ஆம் ஆண்டு அண்டர் 19 உலக கோப்பையை வென்ற இந்திய கேப்டன் உன்முக்த் சந்த் அமெரிக்க அணியில் இடம் பெற்று, உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிராக விளையாடுவதை கனவாக கொண்டிருந்தார். இதற்காக அவர் அமெரிக்க உள்நாட்டு அணியில் இடம் பெற்று சிறப்பாகவும் விளையாடி வந்தார். ஆனால் தற்பொழுது கனடாவுக்கு எதிராக அறிவிக்கப்பட்டிருக்கும் மூன்று டி20 போட்டிக்கு எதிரான அமெரிக்க அணியில் அவரது பெயர் இடம் பெறவில்லை. இதன் காரணமாக அவருடைய டி20 உலக கோப்பை கனவு முடிவுக்கு வருவதாக தெரிகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : பிரித்வி ஷாவ எதுக்கு வெளியே உட்கார வச்சிங்க?.. பாண்டிங் கங்குலிக்கு சென்ஸ் இருக்கா – ஜாபர் டாம் மூடி விமர்சனம்

அதே சமயத்தில் நியூசிலாந்து அணிக்காக 2018 ஆம் ஆண்டு வரையில் விளையாடிய இடதுகை மிதவேகப்பந்து வைத்து ஆல் ரவுண்டர் கோரி ஆண்டர்சன் கனடாவுக்கு எதிரான டி20 தொடரில் அமெரிக்க அணியில் இடம் பிடித்திருக்கிறார். இவர் உள்நாட்டு தொடரில் 28 இன்னிங்ஸ்களில் 900 ரன்கள் குவித்து இருந்தால். மேலும் அமெரிக்காவில் துவங்கப்பட்ட மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் நியூ யார்க் அணிக்கு எதிராக 94 ரன்கள் ஒரு இன்னிங்ஸில் எடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் டி20 உலக கோப்பையில் அமெரிக்க அணிக்காக விளையாடுவது உறுதியாகி இருக்கிறது என்று தெரிகிறது.