இந்த முட்டாள்தனத்தை டெல்லி அணி எப்படி செய்வது? – ஹைதராபாத் அணியின் முன்னாள் பயிற்சியாளர் கேள்வி!

0
147

16வது ஐபிஎல் தொடரின் 40 ஆவது ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் இருக்கும் ஹைதராபாத் மற்றும் டெல்லி அணிகள் மோதின . இந்தப் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் வைத்து நடைபெற்றது .

தாசில் வெற்றி பெற்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது . நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி ஆறு விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் எடுத்தது . அபிஷேக் ஷர்மா சிறப்பாக விளையாடி 67 ரன்களையும் கிளாசன் 53 ரண்களும் எடுத்தனர் . டெல்லி அணியின் பந்துவீச்சில் மார்ச் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்

- Advertisement -

இதனைத் தொடர்ந்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பலம் இறங்கிய டெல்லி 20 ஓவர்களில் 188 ரன்கள் மட்டுமே எடுத்து ஒன்பது ரன்களில் தோல்வியை தழுவியது . அந்த அணியில் மிச்சல் மார்ஸ் அதிகபட்சமாக 63 ரன்களும் சால்ட் 59 ரண்களும் எடுத்தனர் . இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் அணி எட்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

இந்தப் போட்டியில் டெல்லி அணியின் தோல்விக்கு காரணம் அவர்களின் திட்டமிடல் தான் என கடுமையாகச் சாடி இருக்கிறார் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் பயிற்சியாளரும் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் ஆல் ரவுண்டருமான டாம் மூடி . இது தொடர்பாக பேட்டி அளித்திருக்கும் அவர் இந்த ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக விளையாடி வரும் அக்சர் பட்டேலை ஏன் பின் வரிசையில் களமிறக்க வேண்டும் என கேள்வி எழுப்பி உள்ளார்

இது பற்றி பேசி இருக்கும் அவர் ” மிச்சல் மார்ஸ் மற்றும் சால்ட் ஆகியோரின் விக்கெட் இழப்பிற்கு பிறகு டெல்லி அணி தனது உத்வேகத்தை இழந்து விட்டது. சர்ஃபராஸ் கான் மற்றும் பிரியம் கராக் ஆகியோர் களம் இறங்கினர் அந்த இடத்தில் அக்சர் பட்டேல் தான் களம் இறங்கி இருக்க வேண்டும் . அக்சர் பட்டேல் எங்கே ? அவர் என்ன செய்து கொண்டிருந்தார் ?காரிலிருந்து தனது கிட்டை சேகரிக்கிறாரா? என கோபமுடன் கேள்வி எழுப்பினார் .

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “மணீஷ் பாண்டேவின் விக்கெட் வீழ்ச்சிக்குப் பிறகு அக்சர் பட்டேல் வந்திருக்க வேண்டும் . அவர் ஏன் வரவில்லை என்று எனக்குப் புரியவில்லை . நன்கு அனுபவம் வாய்ந்த மற்றும் ஃபார்மில் இருக்கக்கூடிய வீரர் மேலும் அவர் ஒரு இடது கை ஆட்டக்காரரும் கூட சுழற் பந்துவீச்சாளர்கள் வீசிக்கொண்டிருந்த அந்த நேரத்தில் அவர்தான் வந்திருக்க வேண்டும் . இது டெல்லி நிர்வாகத்தின் ஒரு அறிவில்லாத செயல் எனக் கூறி முடித்தார் டாம் மூடி .