29 ஓவர்.. 173 ரன்.. தென் ஆப்பிரிக்கா தைரியமான முடிவு.. வெஸ்ட் இண்டீஸ் அணியை காப்பாற்றிய அதனாஸ்.. டிராவான முதலாவது டெஸ்ட்

0
2881

தென்னாபிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி இரண்டு அணிகளுக்கும் வெற்றி தோல்வி இன்றி ட்ராவில் முடிவடைந்து இருக்கிறது.

தென் ஆப்பிரிக்கா வீரர்கள் இறுதியில் வெற்றி பெற முயற்சித்தும், வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் சிறப்பான பேட்டிங்கால் வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் போட்டியை டிரா செய்துள்ளது.

- Advertisement -

தென்னாபிரிக்க அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கு பெற்று வரும் நிலையில் முதல் டெஸ்ட் போட்டி கடத்த புதன்கிழமை தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் தென்னாபிரிக்க அணி 357 ரன்களும், அதற்குப் பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 233 ரன்களும் குவித்தன. நான்காம் நாள் ஆட்ட நேரம் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 5 ஓவர்களில் 30 ரன்கள் குவித்து விக்கெட் இழப்பின்றி இருந்த வேளையில் ஐந்தாம் நாள் ஆட்டம் நடைபெற்றது.

இதில் முன்னிலை பெற விரும்பிய தென்னாப்பிரிக்க அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க ஆரம்பித்தது. 29 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வெற்றி பெற முயற்சித்து தைரியமாக டிக்ளர் செய்தது. இதில் டோனி டி ஜார்ஜி 60 பந்துகளில் 45 ரன்கள், மார்க்ரம் 48 பந்துகளில் 38 ரன்களும், ஸ்டப்ஸ் அதிரடியாக விளையாடி 50 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 68 ரன்கள் குவித்தார். இதனால் தென் ஆப்பிரிக்கா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிரடியான ரன்களை நிர்ணயித்தது.

- Advertisement -

இதை எடுத்து 298 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பிராத்வெயிட் மூன்றாவது பந்தில் ரன்கள் ஏதும் இன்றி வெளியேறினார். இதற்குப் பிறகு களம் இறங்கிய லூயிஸ் 9 ரன்களில் வெளியேற, அதற்கு பின்னர் ஜோடி சேர்ந்த கார்டீஸ் மற்றும் அத்தனாஸ் ஜோடி ஓரளவு சிறப்பாக விளையாடியது. 31 ரன்கள் குவித்த நிலையில் கார்ட்டி ஆட்டமிழக்க அதான்செ சிறப்பாக விளையாடி 116 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 92 ரன்கள் குவித்தார்.

அதற்குப் பிறகு களம் இறங்கிய ஹார்ட்ஜ் 29 ரன்களும், ஹோல்டர் 31 ரன்களும் குவிக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்திருந்த நிலையில் போட்டி டிரா செய்வதாக அறிவிக்கப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக பந்து வீசிய தென் ஆப்பிரிக்க அணி வீரர் மகாராஜ் நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதையும் படிங்க:சிஎஸ்கேவில் இணைவாரா ரிஷப் பண்ட்?. டெல்லி நிர்வாகம் எடுத்த முடிவு.. கங்குலி வெளியிட்ட முக்கிய தகவல்

முதலில் இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகளும், இரண்டாவது இன்னிங்சில் நான்கு விக்கெட்டுகளும் வீழ்த்திய மகாராஜ் ஆட்ட நாயகன் விருதை வென்றார். இதனால் போட்டி இரண்டு அணிகளுக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் டிராவில் முடிவடைந்துள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -