இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அடுத்த சீசனுக்கான மெகா ஏலம் இந்த வருட இறுதியில் நடைபெற இருக்கிறது. தற்போது நடைபெற்று முடிந்த சீசனில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
அடுத்த சீசனுக்கு ஆன மெகா ஆக்சன் நடைபெறுவதற்கு உள்ளாக சில அணிகள் தங்களது வீரர்களை மாற்றிக்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் டெல்லி அணியின் கேப்டனாக விளையாடிக் கொண்டிருக்கும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், டெல்லி அணியில் இருந்து விலகி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட போகிறார் என்ற தகவல்கள் வெளியானது. மகேந்திர சிங் தோனியின் இடத்தை நிரப்ப ரிஷப் பண்ட் அடுத்த வருடம் சிஎஸ்கேவுக்காக விளையாடப் போகிறார் என்ற தகவல்களும் அவ்வப்போது வெளி வந்தன.
இதனால் மகேந்திர சிங் தோனி இந்த சீசனோடு ஓய்வு பெற போகிறார் என்ற வதந்திகளும் வெளியானது. டோனி அடுத்த வருடம் விளையாடுவாரா? என்பது குறித்து அவரே தற்போது தனது கருத்தை தெரிவித்த நிலையில், ரிஷப் பண்ட் சிஎஸ்கேவில் விளையாடுவது குறித்து டெல்லி அணியின் இயக்குனரான கங்குலி சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார். அதில் டெல்லி நிர்வாகம் ரிஷப் பண்டை தக்கவைக்க விரும்புவதாக சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இது குறித்து கங்குலி கூறும்போது “டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டை டெல்லி நிர்வாகம் ஐபிஎல் 2025ல் தக்க வைக்கவே தீர்மானம் எடுத்துள்ளது. இதனால் பண்ட் டெல்லி அணியிலேயே தொடர்வார்” என்று கூறி இருக்கிறார். இதன் மூலம் பண்ட் வேறு எந்த அணிக்கும் செல்ல வாய்ப்பு இல்லை என்பதை கங்குலி உறுதி படுத்தியிருக்கிறார்.
இதன்மூலம் ரிஷப் பண்ட் சென்னை அணியில் இணையப் போகிறார் என்ற வதந்திக்கு கங்குலி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். தக்க வைக்கப் போகும் வீரர்களின் பட்டியலை பொறுத்தே தோனி அடுத்த ஆண்டு சிஎஸ்கேவில் விளையாடுவது குறித்த தகவலை முடிவு செய்யப் போகிறேன் என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:WTC பைனல்.. யாருக்கும் முடிவாகல.. அந்த 7 மேட்ச் இருக்கு வெயிட் பண்ணுங்க.. பாக் கேப்டன் ஷான் மசூத் பேச்சு
மேலும் ஒரு அணி 6 வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம் என்று ஐபில் நிர்வாகம் அறிவித்து உள்ளதாக ஒரு தகவல் வெளி வரும் நிலையில் தோனி அடுத்த வருடம் நடைபெறும் ஐபில் தொடரில் சென்னை அணிக்கு விளையாடுவார் என்றும் கூற படுகிறது. எனவே இதன் இறுதி முடிவு விரைவில் வெளியாகும் என்று எதிர் பார்க்கலாம்.