மறைந்த என் தந்தையின் முகம்தான் மனதில் தோன்றியது – ஐபிஎல் விளையாடாமல் இந்திய அணிக்கு தேர்வான இளம் வீரர் நெகிழ்ச்சி பேட்டி!

0
10313
Mugesh

இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியுடன் நாளை மூன்றாவது டி20 போட்டி விளையாடி முடித்து, அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது.

இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த அணைக்கு ஷிகர் தவானை கேப்டனாகவும், ஸ்ரேயாஸ் அய்யரை துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

மேலும் இந்த அணியில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த, ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடும், நடுவரிசை வலதுகை பேட்ஸ்மேன் ரஜத் பட்டிதார் மற்றும் பெங்கால் அணிக்காக விளையாடும் வலது கை வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் குமார் ஆகிய இருவருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

இருபத்தி எட்டு வயதான முகேஷ் குமார் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் பெங்கால் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் முப்பத்தி ஒரு முதல் தர போட்டிகளில் விளையாடி 113 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். லிஸ்ட் ஏ போட்டிகளில் 18 ஆட்டங்களில் விளையாடி 17 விக்கெட்டுகளை 5.25 என்ற எக்கானமியில் பெற்று இருக்கிறார்.

கடந்த மாதத்தில் நியூஸிலாந்து ஏ அணி மூன்று டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இந்தியாவிற்கு வந்திருந்தது. இதில் இந்திய ஏ டெஸ்ட் அணியில் இடம்பெற்ற முகேஷ் குமார் முதல் டெஸ்ட் போட்டி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தற்போது நடந்து வரும் இரானி கோப்பை டெஸ்ட் தொடரில் முதல் நாளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது இந்த செயல்பாடு அவரை ஒரு நாள் போட்டி இந்திய அணிக்குள் கொண்டு வந்திருக்கிறது. ஐபிஎல் விளையாடாமல் இந்திய ஒருநாள் போட்டி அணிக்குள் வந்திருக்கும் ஒரு அபூர்வ வீரர் இவர்.

- Advertisement -

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கு இந்திய அணியில் இவரது பெயர் இந்திய அணியின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்-அப் குழுமத்தில் சேர்க்கப்படும் வரை இவருக்கு இந்த விஷயம் தெரியாது. பிறகுதான் இந்த விஷயம் தெரிய வந்திருக்கிறது.

இந்திய ஒருநாள் அணிக்கு தேர்வு செய்யப்பட்டது தெரிந்தது குறித்து பேசியுள்ளார் முகேஷ் குமார் அதில்
” நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். எனக்கு எல்லாம் மங்கலாகத் தெரிந்தது. மறைந்த எனது தந்தை காசிநாத் சிங் அவர்களின் முகம் மட்டுமே நினைவில் இருந்தது. நான் பெங்கால் அணிக்காக விளையாடும் வரை, நான் ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரனாக வருவேன் என்று என் தந்தை நினைக்கவில்லை” என்று கூறினார்.

மேலும் இந்த செய்தியை அறிந்த தனது தாய் பற்றி கூறிய அவர் ” இன்று என் அம்மாவின் கண்களில் கண்ணீர். அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார்கள். வீட்டில் அனைவரும் அழத் தொடங்கினார்கள்” என்று மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக கூறியிருக்கிறார்!