” இங்கிலாந்து அணி முகத்தில் முட்டை வாங்கும்” – தென்ஆப்பிரிக்க கேப்டன் அதிரடி!

0
1308
Dean elgar

இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு மே மாதம் புதிய பயிற்சியாளராக நியூஸிலாந்தின் பிரண்டன் மெக்கல்லமும், புதிய கேப்டனாக கன்ஸ்டிரக்ஷன் கொண்டுவரப்பட்டார்கள். அதற்கு முன்பாக 17 டெஸ்ட் ஆட்டங்களில் இங்கிலாந்து அணி தோற்று இருந்தது. இதற்கு ஜோ ரூட்டின் கேப்டன்சி பலி கொடுக்கப்பட்டது!

ஆனால் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் தொடர் தோல்விகளுக்கு காரணம், அவர்கள் தட்டையான ஆடுகளங்களைக் கொண்டு உள்நாட்டு போட்டிகள் வரை விளையாடினார்கள். இதனால் அவர்களுக்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாட சிறந்த பேட்ஸ்மேன்கள் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.

- Advertisement -

மெக்கல்லம், பென் ஸ்டோக்ஸ் வந்தபிறகு நடப்பு டெஸ்ட் சாம்பியனான நியூசிலாந்து அணியை இங்கிலாந்தில் வைத்து மரண அடி அடித்தது இங்கிலாந்து அணி. இந்த முறை இங்கிலாந்து அணி மிகவும் ஆக்ரோஷமான கிரிக்கெட் அணுகுமுறையை தேர்ந்தெடுத்து விளையாடி இருந்தது. இது யாரும் டெஸ்ட் போட்டிகளில் பெரிதாய் செய்து பார்க்காத பரிசோதனை முயற்சி. இந்த பாணி இங்கிலாந்திற்கு கைகொடுத்தது. இங்கிலாந்தின் இந்த ஆட்ட முறை பாஸ்பால் என்று அழைக்கப்பட்டது. காரணம் மெக்கல்லமின் பட்டப்பெயர் பாஸ் ஆகும்.

தற்போது சவுத் ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது. இதில் தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் போட்டி தொடர்கள் முடிவடைந்துள்ளன. அடுத்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இருக்கிறது. தற்போது இங்கிலாந்தில் 100 பந்து தொடர் நடந்து வருவதால், இந்த டெஸ்ட் தொடர் நிறுத்தப்பட்டுள்ளது. சவுத் ஆப்பிரிக்கா அணி தற்போது இது தொடர்பாக இங்கிலாந்தில் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகிறது.

இங்கிலாந்தில் டெஸ்ட் கிரிக்கெட்டின் ஆக்ரோச அணுகுமுறை பற்றி தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் டீன் ஏஜ் கேர்ள் சில சுவாரசியமான கருத்துக்களை புகழ்ந்திருக்கிறார் ” டெஸ்ட் கிரிக்கெட்டில் துணிச்சலான ஆட்டம் முறைக்கு அதிக ஆயுள் கிடையாது என்று நான் நினைக்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட் தொடர்ந்து ஒரு நாளுக்குள் மாறிக்கொண்டே இருக்கும். நியூசிலாந்து இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இரு அணிகளுக்குமே சமமான வாய்ப்புகள் இருந்தது. நியூசிலாந்து அணி ஆட்டத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளையும் கேட்ச் வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்தி இருந்தால், இங்கிலாந்து அணி தனது முகத்தில் முட்டையை வாங்கியிருக்கும். நாங்கள் இப்படியான ஆட்டம் முறையில் விளையாட மாட்டோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி பேட்ஸ்மேனான எய்டன் மார்க்ரம் இதைப்பற்றி கூறும் பொழுது ” ஆக்ரோஷமான கிரிக்கெட் என்று நாங்கள் அவர்களின் வலையில் விழ விரும்பவில்லை. நாங்கள் இது குறித்து நிறைய ஆலோசித்தோம். எங்களுக்கு நல்ல அனுபவம் இருக்கிறது. அனுபவம் இல்லாதவர்களுக்கு தான் இப்படியான ஒரு ஆட்ட முறை தேவைப்படும். நாங்கள் எங்களின் ஆட்ட பாணியிலேயே தொடர்ந்து விளையாட விரும்புகிறோம். இந்த முறையில் எங்களுக்கு உடன்பாடு கிடையாது” என்று கூறியிருக்கிறார்!