5வது டெஸ்ட்.. பிளேயிங் லெவனை வெளியிட்ட இங்கிலாந்து.. புது சாதனைக்கு திட்டம்.. முக்கிய மாற்றம்

0
307
England

இங்கிலாந்து அணி அதிரடியான முறையில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும், புதிய ரசிகர்களை டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு உருவாக்கி இருப்பது உண்மை.

அதே வேளையில் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் ஒன்பது அணிகள் இடம்பெற்று இருக்கும் நிலையில், இங்கிலாந்து அணி கடைசி அணிக்கு முன்பாக எட்டாவது இடத்தையே பிடித்திருக்கிறது. ஏறக்குறைய இங்கிலாந்து அணி இந்த முறையும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான வாய்ப்பு இழந்திருக்கிறது என்று தெரிகிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்தியாவில் பாஸ்பால் முறை எடுபடாது, எனவே புத்திசாலித்தனமாக விளையாட வேண்டும் என பல இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் கூறி வந்தும், இங்கிலாந்து வீரர்கள் தங்களுடைய அணுகுமுறையை மாற்றிக் கொள்ளவில்லை.

இதன் காரணமாக பாஸ்பால் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரை இழந்திருக்கிறது. ஆனாலும் இங்கிலாந்து அணி இந்த தொடரில் இந்திய அணிக்கு எதிரான கடுமையான சவாலை கொடுத்தது உண்மை. மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் சொதப்பிய காரணத்தால் இங்கிலாந்து தோல்வி அடைந்தது. ஆனால் பெரும்பாலும் அந்த அணியே போட்டியின் ஆரம்பத்தில் முன்னிலையில் இருந்தது.

இந்த நிலையில் தொடரின் கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி நாளை இமாச்சல் பிரதேச மாநில தரம்சாலா மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையே துவங்க இருக்கிறது. வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலை காணப்படும் என்பதால், இங்கிலாந்து மூன்று வேகப்பந்துவீச்சாளர்களைக் கொண்டு வருமா? என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

மேலும் அனுபவ வீரர் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு பணிச்சுமை குறித்து ஓய்வு தரப்படுமா? என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அவர் தற்பொழுது டெஸ்ட் கிரிக்கெட்டில் 698 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். எனவே 700 ஆவது விக்கெட்டை கைப்பற்றும் முதல் வேகப்பந்துவீச்சாளர் என்ற அரிய சாதனையை படைப்பதற்காக, ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் அவர் விளையாடுகிறார்.

மேலும் இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே இடம்பெற்ற இருக்கிறார்கள். இதில் ஒரு மாற்றமாக ஒல்லி ராபின்சன் நீக்கப்பட்டு, அவருடைய இடத்திற்கு அதிவேகமாக பந்து வீசக்கூடிய மார்க் வுட் கொண்டுவரப்பட்டிருக்கிறார். இந்த ஒரு மாற்றத்தை தவிர நான்காவது டெஸ்டில் விளையாடிய வீரர்களே இங்கிலாந்து பிளேயிங் லெவனில் இடம் பெற்று இருக்கிறார்கள்.

இதையும் படிங்க : “எங்க டீம்ல ரிஷப் பண்ட்டுனு ஒரு பையன் இருந்தான்.. டக்கெட்டுக்கு அவனைத் தெரியாது போல” – ரோகித் சர்மா பேட்டி

ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து பிளேயிங் லெவன் :

சாக் கிராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ், பென் ஃபோக்ஸ், டாம் ஹார்ட்லி, மார்க் வூட், ஷோயப் பஷீர், ஜேம்ஸ் ஆண்டர்சன்.