ஆஸ்திரேலியா அணி செப்டம்பர் மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. இதற்கான பதினைந்து பேர் கொண்ட இரண்டு இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது ஆஸ்திரேலியா வெள்ளைப்பந்து கிரிக்கெட் சுற்றுப்பயணம் இங்கிலாந்து கிரிக்கெட்டுக்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. வெள்ளைப் பந்து வடிவத்தில் தொடர்ந்து ஐசிசி தொடர்களில் தடுமாறும் இங்கிலாந்து அணியை மாற்றி அமைப்பதற்கான ஒரு தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட படியே நடந்திருக்கிறது.
தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் இரண்டு இங்கிலாந்து அணியிலும் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோவ், சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் மொயின் அலி மற்றும் வேகப்பந்துவீச்சாளர் கிறிஸ் ஜோர்டான் மூவரும் தேர்வு செய்யப்படவில்லை. எனவே இவர்கள் ஒட்டுமொத்தமாக இங்கிலாந்து அணியில் இனி தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகிறது.
அதே சமயத்தில் ஐந்து புதுமுக வீரர்கள் இங்கிலாந்து அணிக்காக இந்த ஆஸ்திரேலியா தொடரில் அறிமுகமாகிறார்கள். இங்கிருந்து அடுத்த நான்காண்டு திட்டமாக டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்களை வெல்வதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் திட்டமிட்டு இருக்கிறது.
கடந்த இரண்டு உலகக் கோப்பைகளாக இங்கிலாந்து வெள்ளைப் பந்து அணி மிகவும் மோசமாக செயல்பட்டதால் கேப்டன் பொறுப்பில் இருந்து ஜோஸ் பட்லர் நீக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அவர் தொடர்ந்து கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
இங்கிலாந்து டி20 அணி: ஜோஸ் பட்லர் (கேட்ச்), ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜேக்கப் பெத்தேல், பிரைடன் கார்ஸ், ஜோர்டான் காக்ஸ், சாம் கர்ரன், ஜோஷ் ஹல், வில் ஜாக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், சாகிப் மஹ்மூத், டான் மௌஸ்லி, அடில் ரஷித், பில் சால்ட், ரீஸ் டாப்லி மற்றும் ஜான் டர்னர்.
இதையும் படிங்க : நியூசிலாந்து டெல்லி டெஸ்ட்.. ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு.. ரஷித் கான் குர்பாஸ் வியப்பான முடிவு
இங்கிலாந்து ஒருநாள் அணி: ஜோஸ் பட்லர், ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், ஜோஷ் ஹல், வில் ஜாக்ஸ், மேத்யூ பாட்ஸ், அடில் ரஷித், பில் சால்ட், ஜேமி ஸ்மித், ரீஸ் டாப்லி மற்றும் ஜான் டர்னர்