நியூசிலாந்து டெல்லி டெஸ்ட்.. ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு.. ரஷித் கான் குர்பாஸ் வியப்பான முடிவு

0
419
Afghanistan

ஆசிய கண்டத்தில் சமீப காலத்தில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் எழுச்சி மிக சிறப்பாக அமைந்திருக்கிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக, இந்தியாவில் டெல்லி கிரேட்டர் நொய்டா மைதானத்தில் விளையாடும் ஒரு டெஸ்ட் போட்டிக்கான 20 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் மைதானங்கள் இல்லாததாலும், அங்கு சென்று விளையாட மற்ற அணிகள் தயக்கம் காட்டுவதாலும், ஆப்கானிஸ்தான் அணிக்கு இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் மைதானங்களை சொந்த தொடருக்கு தந்து உதவி செய்கின்றன.

- Advertisement -

ரஷித் கான் – ரகமன்னுல்லா குர்பாஸ்

செப்டம்பர் ஒன்பதாம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியாவில் டெல்லி கிரேட்டர் நொய்டா மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணி விளையாட இருக்கிறது. இந்த ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்கள் ரஷித் கான் மற்றும் ரகமன்னுல்லா குர்பாஸ் இருவரும் இடம் பெறவில்லை.

மேலும் தற்போது 20 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணி செப்டம்பர் ஒன்பதாம் தேதி துவங்க இருக்கும் டெஸ்ட் போட்டிக்கு, ஆகஸ்ட் 28ஆம் தேதி இந்தியா வந்து பயிற்சி முகாமில் ஈடுபடுகிறது. இந்த பயிற்சி முகாமில் இருந்து 15 பேர் கொண்ட அணி இறுதியாக தேர்ந்தெடுக்கப்படும்.

- Advertisement -

ஆப்கானிஸ்தான் 20 பேர் கொண்ட அணி

இந்த அணிக்கு கேப்டனாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் கேப்டனாக ஆப்கானிஸ்தான் அணியை வழிநடத்திய ஹசமத்துல்லா ஷாகிதி கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும் அசமத்துல்லா ஓமர்சாய் மற்றும் இப்ராகிம் ஜட்ரன், குல்பதின் நைப் போன்ற முன்னணி வீரர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள்

இதையும் படிங்க : யூபி டி20: 218 ரன் 2 விக்கெட்.. அதிரடியால் துருவ் ஜுரேல் அணி வெற்றி.. நொய்டா கிங்ஸ் தோல்வி.. சிஎஸ்கே டார்கெட் செய்யுமா.?

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி

ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), இப்ராகிம் சத்ரான், ரியாஸ் ஹசன், அப்துல் மாலிக், ரஹ்மத் ஷா, பஹீர் ஷா மஹ்பூப், இக்ராம் அலிகேல் (வி.கீ), ஷாஹிதுல்லா கமால், குல்பாடின் நைப், அஃப்சர் ஜசாய் (வி.கீ), அஸ்மத்துல்லா உமர்சாய், ஜியாவுர் ரஹ்மான் அக்பர், ஷாம்சுர்ரஹ்மான், , ஜாஹிர் கான், நிஜாத் மசூத், ஃபரித் அஹ்மத் மாலிக், நவீத் சத்ரான், கலீல் அஹ்மத் மற்றும் யமா அரபு

- Advertisement -