நட்சத்திர வீரரை சம்பள ஒப்பந்தத்திலிருந்து அதிரடியாக நீக்கியது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்!

0
1052
ECB

இங்கிலாந்து அணி 2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பையில் பங்களாதேஷ் அணி வரை தோற்று முதல் சுற்றோடு வெளியேறியது. இது இங்கிலாந்து கிரிக்கெட்டில் பெரிய கண்டனங்களை உருவாக்கியது!

அதே ஆண்டில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூ ஸ்டாரஸ் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற இருந்த 50 ஓவர் உலகக் கோப்பைக்கு இங்கிலாந்து அணி தயார் செய்யப்பட்டது.

- Advertisement -

இதற்காக பழைய இங்கிலாந்து கிரிக்கெட் முறை முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டு, பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஆக்ரோசமாக விளையாடும் முறைக்கு மாற்றப்பட்டார்கள். மேலும் ஆடுகளங்கள் கவுன்டி போட்டிகள் வரை தட்டையாக உருவாக்கப்பட்டன.

இப்படி ஒரு திட்டம் உருவாக்கப்பட்டதும் இயான் மோர்கன் தலைமையில் அணிக்குள் சில புதிய வீரர்கள் கொண்டு வரப்பட்டார்கள் அதில் மிக முக்கியமானவர் துவக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய். இங்கிலாந்து கிரிக்கெட் அணி நிர்வாகத்தின் ஆக்ரோஷமான பேட்டிங் திட்டத்திற்கு, முதலில் களமிறங்கி அருமையாக வடிவம் கொடுத்தவர்.

ஆனால் இவரது பேட்டிங் ஃபார்ம் தற்போது டி20 வடிவத்தில் மிகவும் மோசமாக இருக்கிறது. டி-20 உலகக்கோப்பை இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோ இல்லாதபோது கூட, இவருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

- Advertisement -

மேலும் பாகிஸ்தான் வந்து 17 ஆண்டுகளுக்குப் பிறகு விளையாடிய இங்கிலாந்து அணியிலும் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இப்போது இன்னொரு அதிர்ச்சியாக இவரை மத்திய சம்பள ஒப்பந்தத்தில் இருந்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிரடியாக நீக்கி இருக்கிறது.

இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய நிர்வாக இயக்குனர் ராப் கீ கூறுகையில் “இது ஜேசன் ராய் தனது பேட்டிங் ஃபார்மை மீண்டும் கண்டறிவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு. இதற்காக அவர் உலகம் முழுவதும் நடக்கும் டி20 தொடர்களில் கலந்து கொண்டு தனது பார்மை கண்டுபிடிக்கலாம். இதற்கு அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். மேலும் அவர் இங்கிலாந்து அணியின் 50 ஓவர் உலகக் கோப்பை அணி திட்டத்தில் இன்றும் தொடர்கிறார் ” என்று கூறியிருக்கிறார்.

ஆனால் சில மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பெரிதாக எந்த காரணங்களையும் கூறாமல் ஜேசன் ராய் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருந்தது. மேலும் ஜேசன் ராய் ஐபிஎல் தொடரில் குஜராத் அணியால் வாங்கப்பட்ட பின்பு, சில தனிப்பட்ட காரணங்களை கூறி தொடரில் இருந்து வெளியேறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.