ஒரு மாதம் தாமதமாக வந்திருந்தால் என் கையை வெட்ட வேண்டியது இருந்திருக்கும் என்று டாக்டர் சொன்னார்; என்னுடையது வழக்கமான விளையாட்டு காயம் கிடையாது – மோசின் கான் வெளியிட்ட அதிர்ச்சி செய்தி!

0
489
Moshin

நேற்று ஐபிஎல் தொடரில் லக்னோ மைதானத்தில் மும்பை மற்றும் லக்னோ அணிகளுக்கு எதிராக நடந்த போட்டி மிகவும் பரபரப்பாக அமைந்தது.

இரண்டாவது பேட்டிங் செய்த மும்பை அணிக்கு டேவிட் மற்றும் கிரீன் இருவரும் களத்தில் இருக்கும் பொழுது, கடைசி ஓவருக்கு வெற்றிக்கு 11 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

- Advertisement -

இந்தக் கடைசி ஓவரை வீசிய லக்னோ அணியின் மோசின் கான் மிகச் சிறப்பாக வீசி வெறும் ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுத் தந்து, தனது அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து, பவர் பிளே வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்தார்.

கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மோசின் கான் காயத்தின் காரணமாக அதற்குப் பிறகு விளையாடவில்லை. ஐபிஎல் தொடரிலும் இப்பொழுது சில போட்டிகளாகத்தான் வந்திருக்கிறார். இவருக்கு தோள்பட்டைக் காயம் என்றே இதுவரை சொல்லப்பட்டு வந்தது. தற்பொழுது காயம் குறித்த அதிர்ச்சியான தகவல் ஒன்றை அவர் கூறியிருக்கிறார்.

இதுபற்றி பேசிய மோசின் கான்
“எனது காயம் குறித்து சொல்ல விரும்புகிறேன். இப்படி ஒரு காயத்தில் எந்த கிரிக்கெட் வீரரும் பாதிக்கப்பட மாட்டார் என்று நம்புகிறேன். எனது தமனிகள் முழுவதுமாக தடைப்பட்டன.

- Advertisement -

இது வேறு வகையான காயம். இதனால் என்னுடைய நரம்புகள் தடைபட்டன. இந்த நேரத்தில் அசோசியேஷன் மற்றும் ராஜீவ் சுக்லா சார், கம்பீர் சார், அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா சார், எனது குடும்பத்தினர் அனைவரும் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார்கள்.

நான் அப்படிப்பட்ட ஒரு மோசமான விஷயத்தை அனுபவிக்கிறேன் என்று யாரும் என்னை உணர விடவில்லை. ஆனால் நான் என் அறுவை சிகிச்சைக்கு முன்னும் பின்னும் மிகவும் சிரமப்பட்டேன். ஒருகட்டத்தில் நான் கிரிக்கெட் விளையாடும் நம்பிக்கையை இழந்து விட்டேன். என் கையை முழுவதுமாக உயர்த்த முடியவில்லை. அது நேராகக் கூட வரவில்லை.

இது மருத்துவம் சம்பந்தப்பட்ட விஷயம். அதை நினைத்து எனக்கு இன்னும் பயமாகக் கூட இருக்கிறது. நான் இன்னும் ஒரு மாதம் சிகிச்சைக்கு தாமதமாக வந்திருந்தால் எனது கையை வெட்ட வேண்டியது இருந்திருக்கும் என்று டாக்டர் கூறினார்!” என்று தெரிவித்திருக்கிறார்!