“ரோகித்தான் உலகிலேயே பெரிய துரதிஷ்டமான மனிதர்!” – டிராவிஸ் ஹெட் பரபரப்பு பேச்சு!

0
8298
Head

நேற்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில் 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று பந்து வீசிய ஆஸ்திரேலியா அணி மிக அபாரமாக செயல்பட்டது. பத்து ஓவர் களுக்கு 80 ரன்கள் இரண்டு விக்கெட் என்று இந்திய அணி வலிமையாகவே இருந்தது.

- Advertisement -

ஆனால் அதற்குப் பிறகு ஆஸ்திரேலியா பந்துவீச்சில் செயல்பட்ட விதம் யாருமே எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்தது. ஒரு பௌண்டரி அடிப்பதற்கு கூட அவர்கள் வழிதரவில்லை.

இதனால் இந்திய அணி 240 ரன்கள் மட்டுமே எடுத்து 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அவர்கள் நேற்று 7 பந்துவீச்சாளர்களை தேவைக்கு பயன்படுத்தி இந்திய அணியை கட்டுப்படுத்தினார்கள்.

பின்பு பேட்டிங் செய்ய வந்து புதிய பந்தில் மூன்று விக்கெட்டுகளை உடனே கொடுத்தார்கள். ஆனால் பனி வரும் என்பது தெரிந்து பொறுமையாக நின்று, மொத்தமாக ஆட்டத்தை முடித்து உலகச் சாம்பியனும் ஆகிவிட்டார்கள்.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணியின் டிராவிட் 137 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். ஆட்டம் இழக்காத லபுசேன் அரை சதம் எடுத்தார். இது ஆஸ்திரேலியா அணிக்கு ஆறாவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் பட்டம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் இந்த தோல்வி குறித்து பேசி உள்ள கவாஸ்கர் கூறும் பொழுது ” எனக்கு இது வருத்தமாகத்தான் இருக்கிறது. இந்திய அணி 10 ஆட்டங்களில் பயங்கரமாக விளையாடியது. ஆனால் கோப்பையை பெறக் கூடிய ஒரு அடியை மட்டும் எடுத்து வைக்க முடியவில்லை. ஆனாலும் நாம் இந்திய அணி பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும்.

இந்த இந்திய அணி சிறப்பான கிரிக்கெட்டை விளையாடி இருக்கிறது. சில சமயங்களில் இறுதி போட்டிகளில் நாம் விரும்பும் வழியில் ஆட்டம் செல்லாமல் போகும். ஆனால் இந்த அணி 10 ஆட்டங்களிலும் பல அம்சங்களிலும் பரபரப்பாக விளையாடியது.

இந்த முறை இந்திய அணியின் வழியில் செல்லக்கூடிய சில விஷயங்கள் நடக்கவில்லை. பரவாயில்லை சில நேரங்களில் அதிர்ஷ்டம் எதிராகத்தான் செல்லும். ஆனால் நான் சொன்னது போல ஐந்து முறை உலக கோப்பையை வென்றவர்களிடம் தோற்பதில் எந்த அவமானமும் கிடையாது. இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எப்படி வெற்றி பெறுவது என்று தெரியும். இந்திய அணி அவர்களை தொடர்ந்து வரும் கோடிக்கணக்கான ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியதற்கு நான் பெருமை கொள்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்!