ஓடிஐ தொடரில் இந்திய அணிக்கு காத்திருக்கும் ஆபத்து; எச்சரிக்கும் ஆகாஷ் சோப்ரா!

0
145
Akash chopra

நான் டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாட இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது ஆஸ்திரேலிய அணி!

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளை வென்று இந்திய அணி பலமாய் முன்னிலை வகிக்க ஆஸ்திரேலியாவிற்கு டெஸ்ட் தொடர் நல்லவித அனுபவம் கொண்டதாக இந்தியாவில் தற்போது அமையவில்லை!

- Advertisement -

இந்த நிலையில் இந்த டெஸ்ட் தொடர் முடிந்து அடுத்து ஒருநாள் கிரிக்கெட் தொடர் மார்ச் 17, 19, 22 ஆகிய தேதிகளில் மும்பை, விசாகப்பட்டினம் சென்னை ஆகிய நகரங்களில் நடக்க இருக்கிறது. இந்தத் தொடருக்கும் பேட் கம்மின்ஸ் கேப்டனாக தொடர்கிறார்!

இந்த ஒரு நாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டிருக்க, இந்த அணி சமீபத்தில் இந்தியாவில் ஒரு நாள் தொடர் விளையாட வந்த அணிகளில் மிகச் சிறப்பாகவும், அதே வேளையில் இந்திய அணியை வீழ்த்தக்கூடிய வகையில் இருப்பதாகவும் ஆகாஷ் சோப்ரா கூறியிருக்கிறார்.

இதுகுறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா
” ஆஸ்திரேலியா ஓடிஐ அணி வந்துவிட்டது. பொதுவாக ஓடிஐ வடிவத்தில் இங்கு விளையாட யார் வந்தாலும் மோசமாக தோற்கடிக்கப்படுவார்கள். பெரிய அளவில் போட்டியை தர மாட்டார்கள். ஆனால் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியா அணி பலமாக இருக்கிறது. ஒரு நல்ல போட்டியை எதிர்பார்க்கிறோம். முதன்முறையாக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு இந்தியாவில் சவால் அளிக்கக்கூடிய ஒரு அணி இதுவாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இது நிச்சயமாக தொடரை வென்று விடும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் நல்ல போட்டியளிப்பதாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
“அவர்கள் நல்ல பந்துவீச்சு வரிசையை வைத்திருக்கிறார்கள். ஸ்டார்க், கம்மின்ஸ், ரிச்சர்ட்சன், சீன் அபோட் ஆகியோர் இருக்கிறார்கள். மேலும் ஆடம் ஜாம்பா வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மிகவும் புத்திசாலி. பேட்டிங் பற்றி பேசினால் அவர்களுக்கு அதிலும் ஆழம் இருக்கிறது. மேக்ஸ்வெல் அணிக்குள் வந்திருக்கிறார். அவர்களிடம் லபுசேன், ஸ்மித், மிட்சல் மார்ஸ் ஆகியோர் உள்ளார்கள். டேவிட் வார்னர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் பந்தை சிவப்பு நிறமாக மாறும் அளவுக்கு அடிப்பவர். அவர் மிகவும் முக்கியமான வீரர்” என்று கூறி இருக்கிறார்!