“இப்போ கிரிக்கெட் ஏமாற்று வேலை.. சச்சின் மேல மதிப்பு கூடுது!” – அக்தர் அதிரடி தாக்கு!

0
9662
Sachin

தற்போதுள்ள கிரிக்கெட் முந்தைய கிரிக்கெட்டில் இருந்து நிறைய விதி மாற்றங்களை பெற்று வந்திருக்கிறது. இதன் காரணமாக தற்போதைய கிரிக்கெட் எளிதாகவும் இருக்கிறது என்று கூறப்படுகிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஒரு நாள் கிரிக்கெட் வடிவம் கொண்டுவரப்பட்டு, பின்பு அதற்கான ஃபீல்டிங் விதிமுறைகள் கொண்டுவரப்பட்டு, கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் வடிவமாக ஒரு நாள் கிரிக்கெட் இருந்து வந்தது.

- Advertisement -

இந்த நிலையில் 2000ஆம் ஆண்டு தாண்டி ஒருநாள் கிரிக்கெட்டின் பீல்டிங் விதிகளில் மாற்றம் மீண்டும் கொண்டுவரப்பட்டது. இந்த விதிமாற்றம்தான் தற்பொழுது வரையில் சர்ச்சைக்குரிய ஒன்றாகவே பேசப்பட்டு வருகிறது.

என்ன மாதிரியாக விதி மாற்றப்பட்டது என்றால், பந்து வீசும் இரு முனைகளிலும் புதிய பந்து கொடுக்கப்பட்டது. எனவே ஒரு பந்தை வைத்து 25 ஓவர்கள் மட்டுமே வீசப்படுகிறது. இதனால் பந்து எளிதில் தேய்ந்து இலகுவாக மாறுவதில்லை. பந்து கடினமாக இருக்கும் பொழுது பேட்டிங் செய்வதற்கு நன்றாக வரும். மேலும் பந்து தேயாமல் ரிவர்ஸ் ஸ்விங் ஆகாது.

இதற்கு அடுத்து 11 முதல் 40 வரையிலான மிடில் ஓவர்களில் ஆரம்பத்தில் ஐந்து பீல்டர்கள் வெளியில் இருந்தார்கள். இதனால் பந்துவீச்சு வியூகத்தை மிடில் ஓவர்களில் வகுப்பதற்கு மற்றும் பேட்ஸ்மேன்களின் ரன் குவிப்பை கட்டுப்படுத்துவதற்கு கேப்டனுக்கும் பந்துவீச்சாளர்களுக்கும் கொஞ்சம் சிரமம் இல்லாமல் இருந்தது.

- Advertisement -

ஆனால் தற்பொழுது வெளிவட்டத்தில் 11 முதல் 40 வரையிலான ஓவர்களில் நான்கு பீல்டர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக மிடில் ஓவர்களில் ரன் எடுப்பது எளிதாகிறது. பவுண்டரிகள் நிறைய வருகிறது. இதன் காரணமாகத்தான் முன்பு போல பகுதி நேர பந்துவீச்சாளர்களை மிடில் ஓவர்களில் பார்க்க முடிவதில்லை.

தற்பொழுது இதுகுறித்து பேசி உள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர் கூறும்பொழுது “இன்றைய கிரிக்கெட் ஒரு மோசடி. இரண்டு புதிய பந்துகளை கொண்டு வந்ததின் மூலம் பேட்ஸ்மேன் 30,000 ரன்கள் அடிக்கிறார்கள். சச்சின், இன்சமாம், முகமது யூசுப், ஜாக் காலிஸ் போன்றவர்கள் தேய்ந்த மென்மையான பந்துகளில் ரன்கள் எடுத்ததால் நான் அவர்களை மதிக்கிறேன்.

ஒரே ஒரு பந்து மட்டுமே பயன்படுத்தப்பட்டு ரன்கள் அடிப்பவர்களுடன் நான் நிற்கிறேன். மேலும் வெளியில் ஐந்து பீல்டர்களை நிறுத்த வேண்டும்!” என்று கூறியிருக்கிறார்!