நான்கு வருடத்திற்கு பிறகு சேப்பாக்கம் திரும்பி வந்த சி.எஸ்.கே அணி அபார வெற்றி!

0
362
CSK

பதினாறாவது ஐபிஎல் சீசனில் ஆறாவது போட்டியில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதிக்கொண்டன!

குஜராத் அணியுடனான முதல் ஆட்டத்தில் சென்னை அணி தோற்று இருந்தது. லக்னோ டெல்லி அணியுடன் தனது முதல் ஆட்டத்தில் ஜெயித்திருந்தது. இந்த நிலையில் போட்டிக்கான டாசை வென்ற லக்னோ அணி கேப்டன் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார்.

- Advertisement -

சென்னை அணிக்கு துவக்கம் தர வந்த ருதுராஜ் மற்றும் கான்வே இருவரும் அதிரடியில் மிரட்ட ஆரம்பித்தார்கள். பவர் பிளேவில் விக்கெட் இழப்பின்றி 79 ரன்களை இந்த ஜோடி எடுத்தது. மிகச் சிறப்பாக விளையாடிய ருத்ராஜ் அரை சதம் அடித்து 31 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 57 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கான்வே 29 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதற்கடுத்து மூன்றாவதாக வந்த சிவம் துபே 16 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். மொயின் அலி 19 ரன்கள், ஸ்டோக்ஸ் 8 ரன்கள், ரவீந்திர ஜடேஜா மூன்று ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். கடைசியில் வந்த மகேந்திர சிங் தோனி 3 பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள் அடித்து அசத்தினார். இறுதி வரை ஆட்டம் இழக்காத அம்பதி ராயுடு 14 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் சென்னை அணி ஏழு விக்கெட்டுகள் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்தது. லக்னோ அணித்தரப்பில் நான்கு ஓவர்கள் பந்துவீசி 28 ரன்கள் விட்டுத்தந்து மூன்று விக்கட்டுகளை ரவி பிஷ்னோய் வீழ்த்தினார்.

இதற்கு அடுத்து களம் கண்ட லக்னோ அணியின் துவக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான கையில் மேயர்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சை சிதறடித்தார். 22 பந்துகளில் எட்டு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் கையில் மேயர்ஸ் 53 ரன்கள் எடுத்து மொயின் அலி வந்து வீட்டில் ஆட்டம் இழந்த பிறகுதான் சென்னை அணிக்கு நிம்மதியே வந்தது. லக்னோ அணி பவர் பிளேவில் ஒரு விக்கெட் இழந்து 80 ரண்களை குவித்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து பந்து வீச வந்த சென்னை அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் மொயின் அலி மற்றும் சான்ட்னர் இருவரும் தங்களது அபார பந்துவீச்சின் மூலம் லக்னோ அணி பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தினார்கள்.

கே எல் ராகுல் 20 ரன், தீபக் ஹூடா 2 ரன், குருனால் பாண்டியா 9 ரன், ஸ்டாய்னிஸ் 21 ரன்கள் என வரிசையாக சென்னை சுழற் பந்துவீச்சாளர்களிடம் சிக்கி வெளியேறினார்கள். இதற்கு அடுத்து வந்த பூரன் தனது அதிரடியான ஆட்டத்தால் சென்னை அணிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தினார். இந்த நிலையில் அவரை துஷார் தேஷ்பாண்டே 32 ரன்களில் வீழ்த்த சென்னை அணிக்கு நம்பிக்கை பிறந்தது.

இதற்கு அடுத்து லக்னோ மணிக்கு இரண்டு ஓவர்களில் 37 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. 19ஆவது ஓவரை வீசிய ஹங்கர்கேகர் 9 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதனால் கடைசி ஓவருக்கு 28 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் பதோனி மற்றும் கிருஷ்ணப்பா கௌதம் இருவரும் இருந்தார்கள்.

இந்த நிலையில் 19ஆவது ஓவரை குறிப்பிட்ட நேரத்திற்குள் வீசாததால் வெளியில் நிற்கும் ஐந்து பீல்டர்களுக்கு பதிலாக நான்கு பீல்டர்கள் மட்டுமே நிற்க அனுமதிக்கப்பட்டார்கள். இதற்கு அடுத்து இருபதாவது ஓவரை வீசிய துஷார் தேஷ் பாண்டேவை 23 ரண்களில் வீழ்த்தினார். இறுதியில் லக்னோ அணியால் 205 மட்டுமே எடுக்க முடிந்தது. சென்னை அணி தனது முதல் வெற்றியை 12 ரன்கள் வித்தியாசத்தில் பெற்றுக் கொண்டது. சென்னை அணி தரப்பில் மொயின் அலி மிகச்சிறப்பாக பந்து வீசி நான்கு ஓவர்களில் 28 ரன்கள் மட்டும் விட்டுத்தந்து நான்கு விக்கட்டுகளை வீழ்த்தினார்!