கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

இது லிஸ்ட்லயே இல்லையே.. தோனிக்காக புது ரூல் கேட்கும் சிஎஸ்கே.. இப்படியும் யோசிக்கலாமா?.. ரசிகர்கள் திகைப்பு

நேற்று மும்பை வான்கடை மைதானத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் தொடருக்கான ஆலோசனை கேட்பதற்கு அணி உரிமையாளர்கள் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. இதில் சிஎஸ்கே அணி நிர்வாகம் யாரும் எதிர்பார்க்காத வகையில் தோனிக்காக ஒரு சிறப்பு விதிமுறையை உருவாக்க இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் முன் வைத்திருக்கிறது.

- Advertisement -

ஐபிஎல் தொடரின் பெரிய அணிகள் மற்றும் தற்போது சிறந்த வீரர்களை கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் அணிகள் மெகா ஏலத்தை எதிர்க்கின்றன. மேலும் அதிகப்படியான வீரர்களை தக்க வைக்க கேட்கின்றன. குறைந்தபட்சம் ஏழு முதல் எட்டு வீரர்களை தக்க வைப்பதற்கு கோரிக்கை வைத்திருக்கின்றன.

அதே நேரத்தில் பஞ்சாப் போன்ற சரியான வீரர்கள் அமையாத அணிகள் மீண்டும் கடந்த ஐபிஎல் ஏலம் போலவே குறைந்த வீரர்களை தக்க வைக்கவும், மெகா ஏலத்தை நடத்தவும் ஆதரவு தெரிவிக்கின்றன. நேற்றைய கூட்டத்தில் கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக் கானுக்கும் பஞ்சாப் அணியின் உரிமையாளர் நெஸ் வாடியாவுக்கும் இது சம்பந்தமான காரசாரமான விவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

மேலும் ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்தும் பெரிய அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மகேந்திர சிங் தோனியை வெற்றியுடன் வழி அனுப்ப விரும்புகிறது. எனவே அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி தங்கள் அணியில் விளையாட வேண்டும் என்று சிஎஸ்கே அணி நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது.

- Advertisement -

இதற்காக நேற்று நடைபெற்ற ஐபிஎல் கூட்டத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 5 வருடங்கள் ஆகிவிட்ட வீரர்களை அன் கேப்டு வீரர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என சிஎஸ்கே அணி நிர்வாகம் கோரிக்கை விடுத்து இருக்கிறது. அன்கேப்டு வீரர்களை குறைந்தபட்சம் 4 கோடி ரூபாய்க்கு தக்கவைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக குறைந்த வீரர்களை தக்க வைக்கலாம் என்றாலும் கூட, தோனியை நான்கு கோடி ரூபாய்க்கு தக்க வைத்து சிவம் துபேவை வெளியில் விட்டால், தோனியை தக்க வைத்ததில் மீதியாகும் பணத்தை சிவம்ம் துபேவுக்கு கொடுத்து ஏலத்தில் வாங்க முடியும்.

இதையும் படிங்க : சூர்யாவுக்கு இனிமேல்தான் வேலையே இருக்கு.. இலங்கை தொடர் பயிற்சி போட்டியா? – கேப்டன் ரோகித் சர்மா கருத்து

சிஎஸ்கே அணி நிர்வாகத்தின் இந்த புத்திசாலித்தனமான நகர்வு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. தோனியை எப்படியாவது மீண்டும் அணிக்குள் வைத்து விளையாட வேண்டும் என்று சிஎஸ்கே அணி நிர்வாகம் யாரும் யோசிக்காத விதத்தில் யோசித்து வருகிறது. அதே சமயத்தில் பழைய முறையில் குறைந்த எண்ணிக்கையில்தான் வீரர்களை தக்க வைக்க முடியும் என்றால், அடுத்த வருடம் தோனி சிஎஸ்கே அணிக்கு விளையாட 99 சதவீதம் வாய்ப்புகள் கிடையாது!

- Advertisement -
Published by
Tags: CSKDhoni

Recent Posts