சூர்யாவுக்கு இனிமேல்தான் வேலையே இருக்கு.. இலங்கை தொடர் பயிற்சி போட்டியா? – கேப்டன் ரோகித் சர்மா கருத்து

0
701
Rohit

இலங்கை கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய அணி முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையில் விளையாடி முழுமையாக வென்றது. இந்த நிலையில் நாளை 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி சந்திக்கிறது. இந்த போட்டிக்கு முன்பாக பத்திரிக்கையாளர்களை இந்திய கேப்டன் ரோகித் சர்மா சந்தித்து பேசினார்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றுவிட்ட காரணத்தினால் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி ஆகியோர் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவில்லை. அந்தத் தொடரில் இளம் வீரர்கள் கொண்ட அணி சூரியகுமார் தலைமையில் மற்றும் கம்பீர் பயிற்சியில் சிறப்பாக விளையாடி தொடரை வென்றது.

- Advertisement -

மேலும் அந்தத் தொடரின் கடைசி டி20 போட்டியில் கேப்டனாக சூரியகுமார் செய்த சில வேலைகள் மிகவும் அற்புதமானதாக இருந்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆடுகளத்திற்கு தகுந்த அதிரடி முடிவுகளை எடுத்து ரிங்கு சிங்கிள் பந்து வீச வைத்ததோடு தானும் பந்து வீசி இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்.

தனிப்பட்ட முறையில் ரோகித் சர்மா குறித்து சூரியகுமார் இந்த தொடரில் பேசி இருந்த பொழுது, ரோகித் சர்மா கேப்டனாக இல்லாமல் ஒரு தலைவராக இருந்தார் தானும் அதுபோல தலைவராக இருக்க விரும்புவதாகவும், மேலும் ரோகித் சர்மா தலைமையின் கீழ் விளையாடி கேப்டன் பொறுப்புக்கு நிறைய கற்றுக் கொண்டு இருப்பதாகவும் கூறியிருந்தார்.

- Advertisement -

கேப்டனாக சூரியகுமார் யாதவ் எப்படி செயல்பட்டு இருந்தார் என்பது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் கூறிய ரோகித் சர்மா ” இந்திய டி20 அணியின் கேப்டனாக சூரியகுமார் யாதவுக்கு சிறந்த நாட்கள் அமைந்து சிறப்பாக தொடங்கி இருக்கிறார். ஆனால் அவர் செய்ய வேண்டிய வேலைகள் இன்னும் நிறைய இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க : திரும்பிய கங்குலி காலம்.. கம்பீருக்கு தானாக அடித்த அதிர்ஷ்டம்.. இனி இந்திய அணியை சாய்ப்பது கடினம்

மேலும் அனுபவமற்ற இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் குறித்து கூறும் பொழுது “இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை நாங்கள் பயிற்சி ஆட்டங்களாக எடுத்துக் கொண்டு விளையாட மாட்டோம். எங்களுக்கு நீண்ட கால இலக்குகளை வைத்திருக்கிறோம். ஆனால் சிறப்பாக விளையாடி தொடரை வெல்வது எங்களுக்கு மிகவும் முக்கியம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -