கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்த சர்ச்சையான உலக அணி.. கேப்டனாக கோலி.. ரோகித் வெளியே!

0
7256
Rohit

நேற்றுடன் 13 வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்று முடித்திருக்கிறது. லீக் சுற்றின் முடிவில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இந்திய வீரர்கள் மிகச் சிறப்பான இடங்களை பிடித்திருக்கிறார்கள்.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி மற்ற அணிகளை விட மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மற்ற கேப்டன்களை விட இந்திய கேப்டன் ரோகித் சர்மாவின் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது. அதே சமயத்தில் துவக்க வீரராகவும் அவருடைய தாக்கம் பெரிய அளவில் போட்டியில் இருக்கிறது.

- Advertisement -

ரோகித் சர்மா கொடுக்கும் அதிரடியான துவக்கம் அடுத்து வரும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ரன் அழுத்தத்தை உருவாக்குவதில்லை. அவர்கள் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள தேவையான நேரத்தை எடுத்துக் கொள்கிறார்கள். இதனால் தற்பொழுது இந்திய அணிக்கு பேட்டிங்கில் எட்டாவது இடம் என்பது பிரச்சினையாக இல்லை.

இதுகுறித்து கிரிக்கெட் உலகின் பல முன்னணி வீரர்களும் ரோகித் சர்மா பேட்டிங் எப்படி தாக்கமானது என்று தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். மேலும் நடப்பு உலகக் கோப்பை தொடரில் 500 ரன்கள் கடந்து அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா நான்காவது இடத்தில் இருக்கிறார்.

இப்படி ரோஹித் சர்மா ஒரு கேப்டனாகவும் மேலும் சிறந்த துவக்க ஆட்டக்காரராகவும் தனித்த தாக்கத்தை உருவாக்கக் கூடியவராக இந்த உலகக் கோப்பையில் தனி ஒரு வீரராக திகழ்ந்து வருகிறார்.

- Advertisement -

இப்படியான சமயத்தில் நடப்பு உலகக் கோப்பைத் தொடர் லீக் சுற்று முடிந்ததும், லீக் சுற்றின் செயல்பாடுகளின் அடிப்படையில், கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஒரு உலக அணியை அறிவித்திருக்கிறது.

அந்த உலக அணியில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் மற்றும் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இடம் கொடுக்கப்படவில்லை. மேலும் அதில் இடம் கொடுக்கப்பட்டுள்ள விராட் கோலியை கேப்டனாகவும் தேர்வு செய்திருக்கிறது.

அதே சமயத்தில் அதிக ரன்கள் குவித்தவர்களில் இரண்டாம் இடம் பெற்றுள்ள இடது கை பேட்ஸ்மேன் குயின்டன் டி காக் மற்றும் ஐந்தாம் இடம் பிடித்துள்ள இடது கை பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் ஆகியோரை துவக்காட்டக்காரராக அறிவித்திருக்கிறது.

ஆனால் வலது கை பேட்ஸ்மேன் ஆன துவக்க ஆட்டக்காரரும், அதிக ரன் குவித்தவர்களில் நான்காவது இடத்தை பெற்றுள்ள ரோகித் சர்மாவுக்கு டேவிட் வார்னர் இடத்தை தரவில்லை. எல்லா வகையிலும் பேட்ஸ்மேன் ஆகவும் கேப்டனாகவும் தாக்கத்தை செலுத்தும் வீரரை, அதற்கான தகுதி இருந்தும், கிரிக்கெட் ஆஸ்திரேலியா புறக்கணித்ததோடு, கேப்டனாக விராட் கோலியை அறிவித்திருக்கிறது. இது சர்ச்சையான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ள நடப்பு உலகக்கோப்பை உலக அணி :

குயிண்டன் டி காக், டேவிட் வார்னர், ரச்சின் ரவீந்தரா, விராட் கோலி, எய்டன் மார்க்ரம் கிளன் மேக்ஸ்வெல், மார்க்கோ யான்சன், ரவீந்திர ஜடேஜா, முகமத் சமி, ஆடம் ஜாம்பா, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் 12ஆவது வீரராக தில்சன் மதுசங்கா.