T20 WCல் செஞ்ச அந்த தப்பை செய்ய மாட்டோம்.. எவ்ளோ பேர் காயமானாலும் நியூசி அணி இதுல ஸ்ட்ராங் – ஷேன் பாண்ட்

0
132

கராச்சியில் இன்று நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதலாவது போட்டி இன்று நடைபெற உள்ளது.

இந்த சூழ்நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஷேன் பாண்ட் தற்போதைய நியூசிலாந்து அணி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

பாக் நியூசி முதல் போட்டி

இந்த சாம்பியன் டிராபி தொடரில் அனைத்து அணிகளுக்கும் காயம் என்பது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இந்திய அணியில் பும்ரா காயம் காரணமாக வெளியேற, ஆஸ்திரேலிய அணியில் நான்கு முக்கிய வீரர்கள் காயம் அடைந்து வெளியேறி இருக்கிறார்கள். அதேபோல முன்னணி அணியான நியூசிலாந்து அணியிலும் வேகப்பந்துவீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் காயம் காரணமாக விலக, அவருக்குப் பிறகு அனுபவ வீரர்களான லாக்கி பெர்குசன் மற்றும் பென் சியர்ஸ் ஆகியோரும் தற்போது காயம் அடைந்து வெளியேறி இருக்கிறார்கள்.

அவர்களுக்கு பதிலாக தற்போது ஜேக்கப் டஃபி மற்றும் கைல் ஜேமிசன் ஆகியோர் அணியை வலுப்படுத்துவதற்காக வருகிறார்கள். மேலும் இதற்கு முன்னர் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. முக்கிய வீரர்கள் காயத்தால் வெளியேறி இருந்தாலும் நியூசிலாந்து அணியின் பேட்டிங் ஆழம் மற்றும் அனுபவம் இந்த தொடரில் அவர்களுக்கு பெரிய அளவில் கை கொடுக்கும் என்று ஷேன் பாண்ட் கூறுகிறார்.

- Advertisement -

பெரிய நம்பிக்கை இருக்கிறது

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” இது மாறிக்கொண்டே இருந்தாலும், உண்மையில் நியூசிலாந்து அணியில் அனுபவம் மற்றும் சிறந்த வீரர்கள் அணியில் இருக்கிறார்கள். அவர்கள் யாரை இழந்தார்கள் என்று பார்த்தால் போல்ட் மற்றும் சவுதி ஆகியோரை வெளிப்படையாக இழந்திருக்கலாம். பெர்குசன் இப்போது காயத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும் நியூசிலாந்து அணி வலுவான சிறந்த அணியாக உள்ளது. துணைக்கண்ட நிலைமைகளில் இவர்கள் கடந்த காலங்களில் மிகவும் வெற்றிகரமாக செயல்பட்டு இருக்கிறார்கள். முத்தரப்பு தொடரில் பெற்ற வெற்றியின் மூலம் நியூசிலாந்து பெரிய நம்பிக்கையை கொண்டிருக்கும்.

இதையும் படிங்க:இந்திய அணிக்கு என்ன பிரச்சனை.. ஏன் அவங்க தொடர்ந்து இதை செஞ்சிட்டே வராங்க – பாக் முன்னாள் வீரர் வேதனை

நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் ஆல் ரவுண்டர்களாக இருப்பதால் நியூசிலாந்து அணிக்கு ஒன்பதாவது வரிசை வரை பேட்டிங் ஆழம் இருக்கிறது. மேலும் பவர் ஹிட்டிங் பேட்ஸ்மேன்களும் அணியில் இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் காயம் அடைந்த ரச்சின் ரவிந்த்ரா மீண்டும் அணிக்க திரும்பி இருப்பது வலு சேர்க்கும். டி20 உலக கோப்பையில் அடைந்த தோல்விக்கு நேர்மாறான அணியாக தற்போதைய நியூசிலாந்து அணி உள்ளது. அந்த தோல்வி போல் இல்லாமல் இந்த முறை நன்கு தயாராகவும், சில வெற்றிகளின் நம்பிக்கையோடும் வருகிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -