இந்திய கிரிக்கெட்

நிதிசை வச்சு பெரிய மூவ் பண்றோம்.. ஆஸி சீரிஸ்க்கு பிளான் விமானத்துல தான் நடக்க போகுது – கேப்டன் கில் பேச்சு

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை கைப்பற்றியது. வெற்றிக்குப் பிறகு இந்திய கேப்டன் சுப்மன் கில் வெற்றி குறித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 போட்டிகளையும் இந்திய அணி வென்றது. இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவிற்கு இந்திய அணி வெள்ளைப் பந்து கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதற்கு சுற்றுப்பயணம் செய்கிறது.

ஃபாலோ ஆன் கொடுத்த காரணம் என்ன?

இதுகுறித்து கேப்டன் சுப்மன் கில் பேசும் பொழுது ” நாங்கள் 300 ரன்கள் வரை முன்னிலை பெற்று இருந்தோம். அதே சமயத்தில் எங்களிடம் 500 ரன்கள் முன்னிலை இருந்தாலும் கூட கடைசி நாளில் ஆறு முதல் ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றுவது கடினமாக இருக்கும் என்று நினைத்தோம். எனவே பந்து வீசுவதற்கு அதிக நேரம் கொடுத்து கொள்ள வேண்டும் என ஃபாலோ ஆன் கொடுத்தோம்”

“நிதீஷ் குமார் ரெட்டிக்கு இந்த போட்டியில் நாங்கள் பந்து வீச வாய்ப்பு கொடுக்கவில்லை. அதே சமயத்தில் சில வீரர்களுக்கு வெளிநாட்டில் மட்டுமே விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்பது அவர்களுக்கு அழுத்தத்தை உருவாக்கும். எனவே நாங்கள் வெளிநாட்டில் வெற்றி பெறக்கூடிய வீரர்களை உருவாக்குவதற்கு அவர்களுக்கு உள்நாட்டில் விளையாடவும் வாய்ப்பு கொடுக்கிறோம்”

- Advertisement -

ஆஸ்திரேலியா தொடருக்கான திட்டம்

“நான் எந்த இடத்தில் பேட்டிங் செய்ய சென்றாலும் ஒரு பேட்ஸ்மேனாக என்ன மாதிரியான திட்டத்தை உருவாக்குவது என்று தான் யோசிக்கிறேன். ஒரு வீரராக உங்களுடைய முக்கிய எண்ணம் அணியை வெற்றி பெற வைப்பது தான். இதற்காக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தான் நான் எப்பொழுதும் சிந்திக்கிறேன்”

இதையும் படிங்க : நான் இந்த டெஸ்ட் சீரியஸ்ல 3 விஷயங்களை கத்துக்கிட்டேன்.. இனிமே இந்த இடம் எனக்குதான் – சாய் சுதர்சன் பேட்டி

“ஆஸ்திரேலியா தொடருக்கான திட்டங்கள் குறித்து எதுவும் முடிவு செய்யப்படவில்லை. ஆஸ்திரேலியாவிற்கு செல்வது நீண்ட விமான பயணமாக இருக்கும். எனவே அந்த விமான பயணத்திலேயே நாங்கள் அந்த தொடருக்கான திட்டத்தை உருவாக்கலாம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by
Tags: Shubman Gill

Recent Posts