இந்திய அணிக்கு எதிராக பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்கு ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆஸ்திரேலியா உள்நாட்டில் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணியை நவம்பர் 22 ஆம் தேதி முதல் டெஸ்டின் மூலம் சந்திக்கிறது. இந்த முதல் டெஸ்ட் போட்டிக்கு தற்பொழுது ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
வழக்கமான ஆஸ்திரேலிய வீரர்கள்
தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் ஆஸ்திரேலியா அணியில் ஸ்மித், கவாஜா, லபுசேன், மிட்சல் மார்ஸ் மற்றும் ஹெட் ஆகியோர் பேட்டிங் யூனிட்டில் இடம் பெற்று இருக்கிறார்கள். பவுலிங் யூனிட்டில் வழக்கம் போல ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட் மற்றும் நாதன் லயன் போன்ற பிரபல வீரர்களும் இருக்கிறார்கள்.
மேலும் வேகப்பந்து வீச்சுக்கு நான்காவது வீரராக ஸ்காட் போலன்ட் அணிக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறார். இந்த வகையில் அறிவிக்கப்பட்டிருக்கும் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர்கள் சூழ மிகவும் வலிமையானதாக காணப்படுகிறது. மேலும் அறிவிக்கப்பட்டிருக்கும் ஆஸ்திரேலியா அணி தங்கள் பயிற்சியையும் ஆரம்பித்துவிட்டது.
புதிய தொடக்க ஆட்டக்காரர்
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்மித் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்க மாட்டார் என்று ஏற்கனவே கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் மார்க்கஸ் ஹாரிஸ், சாம் காண்டஸ் பெயர்கள் துவக்க வீரர்களுக்கான இடத்திற்கு பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் அதிரடியாக ஆஸ்திரேலியா ஏ அணியின் கேப்டன் நாதன் மெக்ஸ்வீனே தொடக்க இடத்திற்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். தற்போது இவர் ஆஸ்திரேலியா அணியுடன் இணைந்து பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.
இதையும் படிங்க: 9 போர் 6 சிக்ஸ்.. வெஸ்ட் இண்டீசை ஊதி தள்ளிய சால்ட்.. முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி
முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி :
பாட் கம்மின்ஸ் (கே), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியான், மிட்ச் மார்ஷ், நாதன் மெக்ஸ்வீனி, ஸ்டீவ் ஸ்டார்க் மற்றும் ஸ்டீவ் ஸ்மித்.






