கேப்டனா வந்தது எதிர்பாராததுதான் ; ஆனால் பழக்கம் இல்லாதது கிடையாது – ரவி சாஸ்திரிக்கு மாஸ் ரிப்ளை தந்த விராட் கோலி!

0
2688
Viratkohli

ஐபிஎல் 16வது சீசனில் இன்று 36 ஆவது போட்டியாக ராயல் சேலைஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பெங்களூரு மைதானத்தில் மோதிக் கொள்ளும் போட்டி தற்பொழுது பரபரப்பாக நடைபெற்று வருகிறது!

நேற்றுடன் நடப்பு ஐபிஎல் தொடரின் ஒருபாதி ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. இன்றையில் இருந்து ஐபிஎல் தொடரின் இரண்டாவது பகுதி ஆட்டங்கள் துவங்குகின்றன. இதை அடுத்து எல்லா அணிகளுக்கும் ஐபிஎல் இரண்டாம் பாகத்திற்கான தனித்திட்டங்கள் இருக்கும்.

- Advertisement -

இந்த நிலையில் இன்றைய போட்டிக்கான டாசில் பெங்களூர் அணியின் கேப்டன் பாப் காயம் அடைந்து இருப்பதால் கேப்டனாக வந்த விராட் கோலி வென்று முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார்.

விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக இருந்த பொழுது தலைமை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரி டாஸ் நிகழ்வை தொகுத்து வழங்க வந்திருந்தார்.

அப்பொழுது ரவி சாஸ்திரி விராட் கோலி இடம் தற்பொழுது கேப்டனாக இருப்பது பற்றி கேட்டார். அதற்கு பதில் அளித்த விராட் கோலி ” போட்டிக்கான திட்டமிடல் நன்றாக இருக்கிறது. இங்கு ரன்களை நல்ல முறையில் துரத்தி இருக்கிறோம். எனவே பந்துவீச்சை தேர்ந்தெடுக்கிறேன். தோழர்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகின்றனர். அதனால் விஷயங்களை கையாள்வது எனக்கு கடினமாக இல்லை. நீங்கள் கேப்டனாக இருக்கும் பொழுது நீங்கள் விஷயங்களை கொஞ்சம் வித்தியாசமாக பார்க்கிறீர்கள். களத்தில் சில விஷயங்கள் இயல்பாகவே வரும். கேப்டன் பதவி இப்பொழுது வந்தது எதிர்பாராத ஒன்று. ஆனால் இது எனக்கு ஒன்றும் புதிதான வேலை கிடையாது!” என்று கூறினார்!

- Advertisement -

இந்திய அணிக்கு விராட் கோலி கேப்டன் ஆக இருந்த பொழுது அவருக்கும் தலைமை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரிக்கும் இடையேயான உறவு மிகச் சிறப்பான புரிதலோடு அமைந்தது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டை மிக உச்சத்தில் வைத்தது இவர்களது கூட்டணிதான். இன்று மீண்டும் விராட் கோலி கேப்டனாக வர அதே இடத்தில் ரவி சாஸ்திரி அந்த நிகழ்ச்சி தொகுத்து வழங்கக்கூடியவராக வந்தது சுவாரசியமாக இருந்தது!