அடுத்த தோனியாக ரெய்னா பார்த்த 19வயது வீரர்.. 7.20கோடிக்கு தட்டி தூக்கிய டெல்லி.. யார் இந்த இளைஞர்?

0
1603
Kumar

ஐபிஎல் தொடரின் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட் எதிர்பாராத சாலை விபத்தில் சிக்கி, உடல் நலம் தேடி வருகின்ற காரணத்தினால்,அந்த அணிக்கு ஒரு இந்திய விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் தேவை இருந்தது.

இந்த நிலையில் டெல்லி அணி இன்றைய ஐபிஎல் மினி ஏலத்தில் மிக முக்கியமாக அதை நோக்கியே நகர்ந்தது. அதே சமயத்தில் தங்கள் அணியில் ஏற்கனவே இருந்த இந்திய விக்கெட் கீப்பர் கே எஸ் பரத்தை வெளியே விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஏனென்றால் அவர்களுக்கு பேட்டிங்கில் தாக்கத்தை கொடுக்கக் கூடிய ஒரு இந்தியவிக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் தேவைப்பட்டது. இதன் காரணமாகவே இந்த ஏலத்தில் மிகவும் முக்கியத்துவமாக விக்கெட் கீப்பர்களுக்காக அவர்கள் காத்திருந்தார்கள்.

இந்த நிலையில் மகேந்திர சிங் தோனி அவர்களின் மாநிலமான ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து, 19 வயதான இளம் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் குமார் குஸ்க்ரா வந்தார்.

இந்த ஏலத்திற்கு முன்பாக இந்த இளம் வீரரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிச்சயம் வாங்கும் என்று, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் ஸ்டார் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா கூறி இருந்தார்.

- Advertisement -

எதிர்பார்த்தபடியே சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த வீரர் வந்ததும் முதலில் கையை உயர்த்தியது. விக்கெட் கீப்பர் விர்திமான் சகாவுக்கு மாற்றாக குஜராத் டைட்டன்ஸ் இந்த வீரரை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உடன் மோதியது.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 60 லட்சத்துடன் ஏலத்திலிருந்து வெளியேறிக் கொண்டது. காத்திருந்த டெல்லி களத்தில் குதித்தது. இதற்கு அடுத்து தொடர்ச்சியாக குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதி 7.20 கோடிக்கு இறுதியாக குமார் குஸ்க்ராவை வாங்கியது.

பேட்டிங்கில் வரிசையில் வந்து தாக்கம் தரக்கூடிய வகையில் உள்நாட்டு வெள்ளை பந்து தொடர்களில் இந்த இளம் வீரர் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மகேந்திர சிங் தோனிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தேவைப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ரிஷப் பண்டுக்கு மாற்று வீரராக டெல்லி இவரை தூக்கி இருக்கிறது!