“அந்த மாதிரி ஒருத்தன் நம்மகிட்ட இல்ல, முடிஞ்சா தூக்கிட்டு வாங்க”; தோனி இப்படி சொல்லவும் தான் நாங்க ரகானேவுக்கு ஏலம் போனோம் – ரகசியத்தை சொன்ன சிஎஸ்கே அதிகாரி!

0
2413

‘அப்படிப்பட்டவர் நம்மிடம் இல்லை, முடிந்தால் வாங்குங்கள்’ என்று தோனி சொல்லவும் நாங்கள் ரகானேவிற்கு ஏலம் போனோம் என்று பேசியுள்ளார் சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன்.

இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி வீரராக இருந்து வந்த ரகானே, கடந்த ஓராண்டாக டெஸ்ட் அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார். அதற்கு முந்தைய ஆண்டுகளில் சிறப்பாக செயல்படவில்லை என்கிற காரணத்திற்காக இந்த முடிவுகளை பிசிசிஐ எடுத்ததாக தெரிகிறது.

- Advertisement -

இப்படிப்பட்ட நிலையில் இருந்த ரகானே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். கடந்த டிசம்பர் மாதம் நடந்த ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொண்ட இவரை முதல் கட்டத்தில் எவரும் எடுக்கவில்லை. சிஎஸ்கே அணி 50 லட்சம் ரூபாய்க்கு எடுத்தது.

அப்போது, ‘இவரை எதற்காக எடுத்தீர்கள்’ என்ற தொனியில் விமர்சனங்கள் பல முன் வைக்கப்பட்டு வந்தன. பின்னர் முதல் இரண்டு லீக் போட்டிகளில் ராகனேவிற்கு பிளேயிங் லெவனில் இடமில்லை. பின் முன்னணி வீரர் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக வெளியில் அமர்ந்தார். மும்பை அணிக்கு எதிரான போட்டியில் மொயின் அலி வயிற்றுப் பிரச்சனை காரணமாக பிளேயிங் லெவனில் இல்லை.

ஆகையால் பிளேயிங் லெவனில் ரகானேவிற்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த போட்டியில் 27 பந்துகளில் 61 ரன்கள் விளாசி போட்டியை மொத்தமாக சிஎஸ்கே அணியின் பக்கம் திருப்பி ஆட்டம் இழந்தார். அதற்கு அடுத்தடுத்த போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடிய அவர் தற்போது ஆறு போட்டிகளில் 224 ரன்கள் விளாசியுள்ளார்.

- Advertisement -

‘டெஸ்ட் போட்டிகள் விளையாடக்கூடியவர்’ என்று விமர்சிக்கப்பட்ட ரகானே ஸ்டிரைக் ரேட் இந்த சீசனில் இதுவரை 190 ஆகும். கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 29 பந்துகளில் 71 ரன்கள் விளாசி ஆட்டநாகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

இந்தாண்டு சையது முஸ்தக் அலி டி20 தொடர் ராகனேவிற்கு எதிர்பார்த்தவாறு அமையவில்லை. 5 போட்டிகளில் கிட்டத்தட்ட 110 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். ரஞ்சிக்கோப்பையில் 600 ரன்கள் குவித்தார். ஐபிஎல் பார்ம், ரஞ்சிக்கோப்பை பார்ம் இரண்டின் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தேர்வு செய்யப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியிலும் ராகனேவிற்கு இடம் கிடைத்துள்ளது.

சிஎஸ்கே அணியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிறகு தொடர்ந்து அவருக்கு ஏறுமுகமாகவே இருந்து வருகிறது என்கிற பல்வேறு பேச்சுக்கள் அடிபடுகின்றன. இந்த தருணத்தில் உள்ளூர் டி20 போட்டிகளிலும் சரியான ஃபார்மில் இல்லை, சர்வதேச போட்டிகளிலும் இடம்பெறாத ரகானைவை எதற்காக ஏலத்தில் எடுத்தீர்கள் என்று சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் இடம் கேள்விகள் எழுப்பப்பட்டது. அது குறித்து பதில் அளித்த அவர்,

“நான் ராகனேவை ஏலத்தில் எடுப்பதற்கு முன்பாக தோனியிடம் விவதித்தேன். அதற்கு அவர், ‘அப்படிப்பட்ட ஒருவர் நம்மிடம் இல்லை, கிடைத்தால் எடுத்துக் கொள்ளுங்கள்.’ என்றார். அவர் சரியான பார்மில் இல்லை என்பதால் எவரும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. ஆகையால் நாங்கள் கேட்ட ஆரம்ப விலைக்கு அவர் கிடைத்துவிட்டார். தோனியை கேட்ட பிறகு, தோனி ரகானே பற்றி அப்படிப்பட்ட வார்த்தைகளை சொன்ன பிறகே ஏலம் கேட்க சென்றோம். இதுதான் நடந்தது.” என்றார்.