“பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலிங் அட்டாக்கை இதனால்தான் சமாளிக்க முடியவில்லை!” – சுப்மன் கில் ஓபன் பேட்டி

0
777
Gill

இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால நட்சத்திரமாக இளம் வலது கை பேட்ஸ்மேன் சுப்மன் கில் நிறைய வீரர்களால் கணிக்கப்படுகிறார். அவருடைய பேட்டிங் திறமையும் அதற்கேற்றார் போல் இருக்கிறது.

இந்த ஆண்டில் அவர் இந்திய மண்ணில் ஒருநாள் கிரிக்கெட் சதம், ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம், டி20 கிரிக்கெட்டில் சதம், டெஸ்ட் கிரிக்கெட் சதம், ஐபிஎல் தொடரில் சதம் என எல்லாவற்றிலும் சதங்களைக் கொண்டு வந்து மிரட்டி இருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட்டில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்திய பேட்டிங் யூனிட்டை வழிநடத்தக்கூடிய தலைவராக இருப்பார் என்று முன்னாள் வீரர்கள் பலர் இவரைப் பற்றி மிக உயர்வாக கூறி வருகிறார்கள்.

இந்திய கிரிக்கெட்டில் பெரும்பாலும் வீரர்கள் பந்து எகிறும் ஆடுகளங்களில் தடுமாறுவார்கள். ஏனென்றால் ஆசியாவில் பொதுவாக அப்படியான ஆடுகளங்கள் இருக்காது. ஆனால் கில் மட்டும் விதிவிலக்காக பந்து எகிறினால் மிக சிறப்பாக விளையாடக்கூடியவராக இருப்பவர்.

இப்படி திறமையான இளம் பேட்ஸ்மேனாக இருக்கக்கூடிய இவருக்கு நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் கொஞ்சம் மோசமாக அமைந்தது. அதில் அவரது நம்பிக்கை கொஞ்சம் குறைந்தது. இது தற்பொழுது பாகிஸ்தானுக்கு எதிராக ஆசியக் கோப்பையில் எதிரொலித்தது. ஆனாலும் கூட நேபாள் அணிக்கு எதிராக பழைய கில்லாக திரும்பி வந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் பாகிஸ்தான் வேத பந்துவீச்சு குறித்து பேசி உள்ள சுப்மன் கில் ” நீங்கள் இந்த பெரிய மட்டத்தில் கிரிக்கெட் விளையாடும் பொழுது, நீங்கள் சில சமயங்களில் மட்டுமே இடதுகை வேகம் பந்துவீச்சாளர்களை விளையாடுகிறீர்கள். மற்ற அணிகளை எடுத்துக் கொள்ளும் பொழுது நாங்கள் மிகக் குறைவாகவே பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடி இருக்கிறோம்.

அவர்கள் தரமான பந்துவீச்சு தாக்குதலை கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அவர்களை அடிக்கடி விளையாடாமல் இருப்பது இந்த இடத்தில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. இதுதான் அவர்களைச் சந்திப்பதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

இப்படியான பந்துவீச்சு தாக்குதலை நீங்கள் எதிர்கொள்ளும் பொழுது உங்களது பேட்டிங் சரிவை சந்திக்கிறது. இது பேட்டிங் டெக்னிக் பற்றிய விஷயம் கிடையாது. இது பந்துவீச்சாளர்களை பற்றியது.

அவர்கள் சில நல்ல பந்துகளை வீசலாம். அவர்கள் விக்கெட்டுகளையும் வீழ்த்தலாம். நீங்கள் நன்றாக விளையாடும் பொழுது உங்கள் பக்கத்தில் விஷயங்கள் சாதகமாகச் செல்லும். நீங்கள் உங்கள் விளையாட்டை நம்பி தொடர்ந்து பெரிய ரன்களை பெற முயற்சி செய்ய வேண்டும்!” என்று கூறியிருக்கிறார்!