“இன்னைக்கு இதனாலதான் 9 பேர பவுலிங் பண்ண வச்சேன்!” – கேப்டன் ரோகித் சர்மா பேச்சு!

0
57658
Rohit

இன்று பெங்களூரில் நடைபெற்ற 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் கடைசி நிலை போட்டியில் இந்தியா நெதர்லாந்து அணிகள் மோதிய போட்டியில், இந்திய அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணிக்கு முதல் மூன்று வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா, கில் மற்றும் விராட் கோலி மூவரும் அரை சதங்கள் அடித்தார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல்.ராகுல் இருவரும் சதம் விலாசினார்கள். இந்திய அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதல்முறையாக 400 ரன்களை கடந்து 410 ரன்கள் எடுத்தது.

இதற்கடுத்து பெரிய இலக்கை நோக்கி விளையாடிய நெதர்லாந்து அணி 250 ரன்கள் எடுத்து 160 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இன்று இந்திய அணியின் தரப்பில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல்.ராகுல் தவிர்த்து 9 பேர் பந்து வீசினார்கள். இதில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா விக்கெட்டுகள் கைப்பற்றியது முக்கியம்.

வெற்றிக்குப் பின் பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறும் பொழுது “நாங்கள் இந்த உலகக் கோப்பையை தொடங்கிய பொழுது ஒவ்வொரு போட்டியாக மட்டுமே பார்க்க வேண்டும் என்று நினைத்தோம். இது நீண்ட தொடர் என்பதால் நாங்கள் முன்னோக்கி எதையும் சிந்திக்க விரும்பவில்லை. ஒரு விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம்.

- Advertisement -

மேலும் வெவ்வேறு இடங்களுக்கு தகுந்த மாதிரி நாங்கள் எங்களை மாற்றிக் கொள்ள வேண்டி இருந்தது. இதைத்தான் நாங்கள் செய்தோம். முதல் போட்டியில் இருந்து இப்பொழுது வரை செயல்பட்ட விதம் சரியாக இருக்கிறது. இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

ஏனென்றால் வெவ்வேறு போட்டிகளில் வெவ்வேறு நிலைமைகளில் ஒவ்வொரு வீரர்கள் வந்து மிகச் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். இது அணிக்கு மிகவும் நல்ல அறிகுறி.

இங்குள்ள நிலைமைகள் எங்களுக்கு தெரிந்ததுதான். ஆனால் வேறு வேறு அணிகளுக்கு எதிராக அதற்கு ஏற்றவாறு மாறி விளையாடுவது சவாலானது. அதை எங்கள் வீரர்கள் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

நாங்கள் முதல் நான்கு ஆட்டங்களில் தொடர்ச்சியாக இரண்டாவதாக பேட்டிங் செய்தோம். அடுத்து நாங்கள் தொடர்ச்சியாக முதலில் பேட்டிங் செய்தோம். மீதமுள்ளவற்றை ஸ் பின்னர்கள் மற்றும் சீமர்கள் செய்தார்கள். இது மிகவும் முக்கியமானது.

அணி சூழ்நிலையை மிகவும் கலகலப்பாக வைத்துக் கொள்ள விரும்பினோம். மேலும் அப்படிப்பட்ட சூழ்நிலைகள் அமைய வெற்றிகள் முக்கியம். நாங்கள் ஒவ்வொரு விளையாட்டையும் வேடிக்கையாக களத்தில் அணுக நினைத்தோம். அதுதான் நாங்கள் வெளிப்படுத்தி வருகிறோம்.

இன்று எங்களுக்கு மொத்தம் ஒன்பது பந்துவீச்சு விருப்பங்கள் இருந்தன. இது எங்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. இன்று ஒன்பது பந்துவீச்சாளர்களை பயன்படுத்த வேண்டிய அவசியம், வேகபந்துவீச்சாளர்கள் வைடு யார்க்கர்களை வீச வேண்டி இருந்தது. எனவே அதற்கு பதிலாக நாங்கள் மற்ற பந்துவீச்சு விருப்பங்களை பயன்படுத்தினோம்!” என்று கூறியிருக்கிறார்!