“அது அவங்க பிரச்சனை என்னோடது இல்லை” – ரோகித் டிராவிட் குறித்த கேள்விக்கு பும்ரா பதில்!

0
2050
Bumrah

அயர்லாந்து அணிக்கு எதிராக அவர்களது மண்ணில் நாளை இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் டப்ளின் மைதானத்தில் விளையாட இருக்கிறது.

இந்தத் தொடருக்கு கேப்டனாக காயத்தில் இருந்து நீண்ட நாட்கள் கழித்து திரும்ப வரும் ஜஸ்ப்ரீத் பும்ரா அறிவிக்கப்பட்டு இருக்கிறார். அவர் நாளைய கேப்டனாக டாஸ் போடப்படும் பொழுது, இந்திய டி20 அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற முதல் வேகப் பந்துவீச்சாளர் என்ற சிறப்பை பெறுவார்.

- Advertisement -

கடந்த டி20 உலகக் கோப்பையில் அவரை பெற முடியாமல் போனது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவை உருவாக்கியது. ஆனால் இந்த முறை சுதாரித்து அவருக்கு நிறைய ஓய்வு கொடுத்து அவருக்கான மறுவாழ்வை சிறப்பாக அமைத்து, இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் உலக கோப்பைக்கு அற்புதமாக அவரை கொண்டு வந்திருக்கிறது.

கேப்டன் ரோஹித் பயிற்சியாளர் டிராவிட் இருவரும் பும்ராவை தவறவிட்டது குறித்து நிறைய பேசி இருந்தார்கள். அவர் மீது இவர்கள் இருவரும் நிறைய எதிர்பார்ப்புகள் வைத்திருக்கிறார்கள். தற்பொழுது இது குறித்து மிக முக்கியமான விஷயங்களை பும்ரா பகிர்ந்து இருக்கிறார்.

அயர்லாந்து தொடருக்கு முன்பாக பேசியுள்ள பும்ரா “எல்லாம் நல்லது. நான் திரும்பி வந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இது ஒரு நீண்ட பாதை. இதில் நான் திரும்பி வந்ததில் மகிழ்ச்சி. நான் மீண்டும் விளையாடுவதை ஆவலோடு எதிர்நோக்குகிறேன். எனக்கு தற்பொழுது எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது.

- Advertisement -

உங்கள் கைகளில் இல்லாத விஷயங்கள் சிலது உண்டு. நீங்கள் உங்கள் உடலை மதிக்க வேண்டும். மீட்பதற்கு நேரம் கொடுக்க வேண்டும். ஆனால் அது உங்களுக்கு விளையாடுவதற்கான பசியை உண்டாக்குகிறது. என் உடல் தகுதி மீட்கப்பட்ட விதத்தில் இதை நான் இன்னும் கொஞ்சம் செய்ய முடியும் என்று உணர்ந்தேன். நான் எந்த சூழ்நிலையிலும் பின்வாங்கவில்லை. நான் என்சிஏ-வில் பல பயிற்சி செசன்களில் ஈடுபட்டேன். அங்கு மட்டுமல்ல, இனி நான் குஜராத் அணிக்கு திரும்பினாலும் கூட அங்கும் எனக்கு எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது.

உங்களுக்கு காயம் ஏற்படும்பொழுது வெறுப்பாக இருக்கும். ஆனால் சுய சந்தேகத்தோடு என்னால் திரும்ப வர முடியாது என்று நினைத்துக் கொள்வதற்கு பதிலாக என்னால் மீண்டும் வர முடியும் என்று நினைத்தேன். நான் கடந்து வந்த நாட்களை இரண்டு நாட்கள் என்று நினைக்கவில்லை. மாறாக விளையாட்டில் நான் திரும்ப வருவதற்கான வழிமுறைகளில் கவனம் செலுத்தினேன்.

யாருடைய கருத்தாக இருந்தாலும் நான் அதை மதிக்கிறேன். ஆனால் அவர்கள் நல்லவர்களோ கெட்டவர்களோ ஆனால் அவர்களுடைய கருத்துக்களை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. என்னை அழுத்தத்திற்கு உள்ளாக்க விரும்பவில்லை. தேவையற்ற எதிர்பார்ப்புகளை என் மீது வைத்துக் கொள்வதில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு திரும்ப வருகிறேன். என் நேரத்தை நான் அனுபவிக்க விரும்புகிறேன்.

நான் நிறைய பங்களிக்க வேண்டும் எல்லாவற்றையும் மாற்ற வேண்டும் என்று நினைக்கவில்லை. நான் குறைந்த எதிர்பார்ப்புகளுடன் வருகிறேன். மற்றவர்கள் என்னிடம் இருந்து அதிகமாக எதிர்பார்த்தால் அது அவர்களுடைய பிரச்சனை என்னுடையது அல்ல.

நான் பழைய அதே ஆள்தான். என் திறமையின் மீது எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. நீண்ட நாட்களுக்குப் பிறகு திரும்பி வருகிறேன் என்பதை புரிந்து கொள்கிறேன். எனவே நீங்கள் சிறப்பாக செயல்பட முயற்சி செய்கிறீர்கள். மேலும் நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதில் உண்மை அற்றவராக இருக்கக் கூடாது. அதிக நேரம் விளையாடுவதை நீங்கள் நன்றாக உணர்வீர்கள்!” என்று கூறியிருக்கிறார்!