அதெல்லாம் மோசம் இல்ல.. அஷ்வினுக்கு ஹர்பஜன் சிங் திடீர் ஆதரவு- ஆச்சரியப்படுத்தும் கருத்துக்கள்!

0
299
Ashwin

தற்போது இந்திய அணியில் மாற்று வீரர் இல்லாத ஹர்திக் பாண்டியா காயம் அடைந்திருக்கின்ற காரணத்தினால், இந்திய அணியின் பேட்டிங் நீளம் எட்டு வரை அமைக்க முடியாத நிலைமை இருக்கிறது.

மேலும் அணிக்கலவையில் புதிய வீரர்களை உள்ளே கொண்டு வர தேவையும் உருவாகி இருக்கிறது. ஹர்திக் பாண்டியா உள்ளே வருகின்ற மாதிரி இருந்தால் அவருடைய இடத்தில் மட்டும் ஒருவரை கொண்டு வந்தால் போதாது. ஷர்துல் தாக்கூரையும் மாற்றியாக வேண்டிய நிலை இருக்கிறது.

- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இப்படி இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டு முகமது சமி மற்றும் சூரியகுமார் யாதவ் என இருவர் அணிக்கு உள்ளே வந்திருந்தார்கள்.

இன்று பிசிசிஐ தரப்பில் வெளியிடப்பட்ட செய்தியில் ஹர்திக் பாண்டியாவுக்கு கணுக்கால் தசைநார் கிழிவு ஏற்பட்டிருப்பதாகவும், எனவே அவர் அடுத்த மூன்று போட்டிகளுக்கு கிடைக்க மாட்டார் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை லக்னோ மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் இந்திய அணி விளையாட இருக்கிறது. நடப்பு உலகக்கோப்பையில் லக்னோ ஆடுகளம் வேகப்பந்துவீச்சு சுழற்பந்துவீச்சு என இரண்டிற்கும் ஒத்துழைப்பதாகவே இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை கொண்டு வருவதும் தவறு கிடையாது என்பதாக ஹர்பஜன்சிங் பேசியிருக்கிறார். எனவே மூன்றாவது வேகப்பந்துவீச்சாளர் இடத்தில் அஸ்வினை விளையாட வைக்க அவர் ஆதரவு கொடுத்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “இங்கிலாந்து அணி சுழற் பந்துவீச்சை சரியாக விளையாடவில்லை. மேலும் அவர்கள் நடப்பு உலகக் கோப்பை தொடரிலும் சரியாக விளையாடவில்லை. பந்து ஆடுகளத்தில் திரும்ப தொடங்கினால் அவர்களால் நன்றாக விளையாட முடியும் என்று நான் நினைக்கவில்லை. எனவே மூன்று ஸ்பின்னர்கள் விளையாடுவது மோசமான விஷயமாக இருக்காது.

மூன்று ஸ்பின்னர்கள் விளையாட சிராஜிக்கு ஓய்வு கொடுக்கலாம். அவர் தொடர்ச்சியான போட்டிகளில் விளையாடுகிறார். இப்பொழுது முகமது சமி உள்ளே வந்து ஐந்து விக்கெட் கைப்பற்றி நல்ல நிலையில் இருக்கிறார். எனவே அவரை விளையாட வைப்பது சரியாக இருக்கும்.

இந்திய அணியில் ரோகித் சர்மா முதல் விராட் கோலி வரை மிகவும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். தற்பொழுது பந்துவீச்சில் சமியும் வந்து நன்றாக செயல்பட்டு இருக்கிறார். பெரிய வீரர்கள் பெரிய போட்டிகளில் எப்பொழுதும் நன்றாக விளையாடுவார்கள்!” என்று கூறியிருக்கிறார்!