இந்த இந்திய வீரரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டது அவ்வளவுதான் – இந்திய முன்னாள் வீரர் வருத்தமான பதிவு!

0
221
Shikar

இந்திய கிரிக்கெட் தற்பொழுது மாற்றத்திற்கான முக்கியக் காலகட்டத்தில் நிற்கிறது. இங்கிருந்து ஒரு புதிய இந்திய கிரிக்கெட் அணி உருவாக்கப்படும் என்பது உறுதி. தற்பொழுது அதற்கான வேலைகள்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது!

இந்திய கிரிக்கெட்டில் ஏற்பட இருக்கும் மாற்றம் என்றால், அது பழைய வீரர்கள் வெளியேறி, புதிய வீரர்கள் உள்ளே வருவது மட்டும் கிடையாது, இந்திய கிரிக்கெட் அணுகுமுறையையும் சேர்த்து மாறுவதாகும்!

- Advertisement -

இந்திய கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால், இப்பொழுது எல்லா வடிவத்திற்கும் ஒரே மாதிரியான வீரர்களை கொண்டுதான் விளையாடிக் கொண்டிருக்கிறது. ஆனால் உலக கிரிக்கெட்டில் இங்கிலாந்து முதல்முறையாக ஒவ்வொரு வடிவத்திற்கும் ஒவ்வொரு வீரர்களை கொண்டு விளையாட ஆரம்பித்துவிட்டது. அதற்கு கைமேல் பலனையும் தந்திருக்கிறது.

தற்பொழுது சொந்த நாட்டில் நடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் முதல் சுற்றோடு வெளியேறியதால், ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி நிர்வாகமும் இந்த முடிவுக்கு வந்து, தற்பொழுது தென் ஆப்பிரிக்காவில் இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணி தனது மொத்த அணுகுமுறையையும் மாற்றிக் கொள்வதற்கு, ஒவ்வொரு கிரிக்கெட் வடிவத்திலும், முதல்முதலில் பலி கொடுக்கப்பட்ட வீரராக டெல்லியைச் சேர்ந்த ஷிகர் தவான் இருந்து வருகிறார்.

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய சராசரி 40ஆக இருந்த பொழுதே, அவர் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டார். டி20 கிரிக்கெட்டில் ஐபிஎல் தொடரில் வருடம் தோறும் குறைந்தது 400 க்கும் மேலான ரண்களை அடித்தும், அவர் இந்திய டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டார். இதே கதைதான் அவருக்கு இந்த முறை ஒருநாள் கிரிக்கெட் இந்திய அணியிலும் நடந்திருக்கிறது.

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ” ஷிகர் தவானின் ஓடிஐ கிரிக்கெட் எதிர்காலத்தை எடுத்துக் கொண்டால், அவர் இப்பொழுது டி20 இந்திய அணியில் இடம் பெறுவது இல்லை. அடுத்த உலகக்கோப்பை 2027ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் வடிவத்திற்கு நடக்கிறது. இதையெல்லாம் பார்க்கும் பொழுது அவரது ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக நினைக்கிறேன்.

அதாவது அவர் முடிந்து விட்டார், இனி விளையாட மாட்டார் என்று நான் அவரது கிரிக்கெட் வாழ்க்கைக்கு இரங்கல் எழுதவில்லை. அவர் இந்திய டி20 அணியிலும் தேர்வு செய்யப்பட மாட்டார். அதே வேளையில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை அடுத்து 2027ஆம் ஆண்டு நடக்கிறது. இதனால் அவர் இந்தியாவுக்கு இனி விளையாடுவது கடினம் என்று சொல்கிறேன். எப்படி நடந்தாலும் சரி, இதுவரை ஷிகர் தவான் இந்திய கிரிக்கட்டுக்காக செய்ததற்கு பெருமைப்பட வேண்டும்!” என்று கூறி இருக்கிறார்!