“எல்லாம் போதும்.. இனி ஸ்டோக்ஸ் மெசேஜ் பண்ணா டெலிட் பண்ணிடுவேன்” – சிஎஸ்கே வீரர் அதிரடி பேச்சு!

0
234
CSK

இந்திய கிரிக்கெட் வாரியம் 16 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்திவரும் உலகின் முதல் நிலை டி20 தொடரான ஐபிஎல் தொடரில், மிகப்பெரிய வெற்றிகரமான அணியாக விளங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆல் ரவுண்டர்கள் மொயின் அலி மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரும் விளையாடுகிறார்கள்!

மொயின் அலி இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து சில வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றுக் கொண்டார். அவர் தொடர்ச்சியாக இங்கிலாந்து வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணிகளில் மட்டுமே இடம் பெற்று விளையாடி வந்தார். மேலும் உலகெங்கும் நடக்கும் டி20 தொடர்களில் பங்கேற்றார்.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது இங்கிலாந்தில் நடந்து முடிந்துள்ள ஆசஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு முன்பாக, இங்கிலாந்து அணியின் பிரதான சுழற் பந்துவீச்சாளர் ஜாக் லீச் காயமடைந்து தொடரை விட்டு வெளியேறினார்.

இந்த நிலையில் உள்நாட்டில் நடைபெறும் டெஸ்ட் தொடரை வென்றே ஆக வேண்டும் என்கின்ற கட்டாயத்தில், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மொயின் அலியை திரும்பவும் இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு வருமாறு கேட்டுக் கொண்டார். இதற்காக அவருக்கு அவர் மெசேஜ் அனுப்பும் பொழுது, அதற்கு நகைச்சுவையாக மொயின் அலி லொள் என்று திருப்பி ரிப்ளை செய்திருந்தார்.

இங்கிலாந்து டெஸ்ட் அணிக்குள் மீண்டும் திரும்பி வந்த மொயின் அலி நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 180 ரன்களும், ஒன்பது விக்கெட்டுகளும் வீழ்த்தி, தொடரை இங்கிலாந்து அணி இரண்டு என சமன் செய்ய உதவியாக இருந்தார். இதுவரை இங்கிலாந்து அணிக்காக 68 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3094 ரன்களும், 204 விக்கட்டுகளும் வீழ்த்தி இருக்கிறார்.

- Advertisement -

நேற்று தொடர் முடிந்து பேசிய அவர்
“ஸ்டோக்ஸ் எனக்கு மீண்டும் அணிக்குள் வரவேண்டும் என்று மெசேஜ் செய்தால், அதை நான் டெலிட் செய்து விடுவேன். நான் செய்ய வேண்டியதை செய்தேன். அதை ரசித்தேன். எல்லாம் நல்லபடியாக முடிந்தது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.

இது ஆச்சரியமான ஒன்றாக இருக்கிறது. அணிக்கு மீண்டும் திரும்பி வந்தது கடினமான ஒன்று. ஏனென்றால் நான் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஒருபோதும் நன்றாக விளையாடியது கிடையாது. ஆனால் ஸ்டோக்ஸ் என்னிடம் திரும்ப அணிக்குள் வரவேண்டும் என்று கேட்ட பொழுது, ஏன் நம்மால் முடியாது போய்த்தான் பார்ப்போம் என்று நினைத்தேன். ஒரு புத்திசாலித்தனமான அணிக்குள் மீண்டும் வரும்பொழுது மிக நன்றாக செயல்பட முடியும் என்று நான் நம்புகிறேன்.

நான் அணிக்கு திரும்பி வருவதற்கு சரி என்று சம்மதித்தது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். நான் முதல்முறையாக அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமுக்குள் மீண்டும் திரும்பி வரும் பொழுது அங்கு தலைமையாக ஸ்டோக்ஸ் மற்றும் மெக்கலம் இருவரும் இருந்தார்கள். மீண்டும் ஜிம்மி மற்றும் பிராடு இருவருடன் சேர்ந்து விளையாடினேன்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றி உடன் நான் முடித்துக் கொண்டது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அணிக்கு அணியின் வெற்றிக்கு உதவ என்னால் முடியும், மேலும் என்னால் வெற்றிகரமாக முடிக்க முடியும் என்பதில் வியப்படைகிறேன். மேலும் இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி பிரதிநிதித்துவப்படுத்தியதற்காக மகிழ்கிறேன்!” என்று கூறியுள்ளார்!