“அது எனது மோசமான தருணம்” இரண்டாவது டெஸ்ட் போட்டியின் ஏமாற்றம் பற்றி மனம் திறந்த ஸ்டீவன் ஸ்மித்!

0
104

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி இரண்டு வெற்றிகளை பெற்று முன்னணியில் உள்ளது.

ஆஸ்திரேலியா அணி இந்த டெஸ்ட் போட்டியையும் தோல்வி பெறும் பட்சத்தில் தொடர இந்திய அணி இடம் இலக்க நேரிடும். இதன் காரணமாக இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற ஆஸ்திரேலியா அணி கடுமையாக போராடும். ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர் காயம் காரணமாக அணியில இடம் பெறவில்லை. மேலும் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் அவரது தாயாரின் உடல் நலக்குறைவு காரணமாக ஆஸ்திரேலியா சென்று இருக்கிறார். இதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு ஆஸ்திரேலியா அணியின் ஸ்டீவன் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணியில் முன்னணி வீரர்களான மிச்சல் ஸ்டார்க் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோரும் உடற்தகுதி பெற்றிருப்பது ஆஸ்திரேலியா அணியின் நம்பிக்கையை அதிகரிக்கும். இந்திய அணியை பொறுத்தவரை துவக்க வீரர் கேஎல்.ராகுல் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சரியாக ஆடாத நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என்று தெரியவில்லை. அவருக்கு பதிலாக சுப்மண் கில் ஆடுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஸ்டீவன் ஸ்மித் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தான் செய்த தவறு பற்றி அவர் விளக்கி கூறினார். இது பற்றி அவர் பேசியபோது” இது வரை 94 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருக்கும் எனக்கு அந்தப் போட்டியில் நடைபெற்றது ஒரு மோசமான அனுபவம். ஒரு போட்டிகளிலும் நான் களத்தை விட்டு வெளியேறும்போது இவ்வளவு கோபமடைந்ததில்லை . அஸ்வினின் பந்துவீச்சில் நான் என்ன செய்தேன்?என்ற விரக்தியில் நான் அவ்வாறு சென்று விட்டேன். அது என்னுடைய கிரிக்கெட் வாழ்வில் ஒரு மோசமான தருணம் என குறிப்பிட்டார்.

மேலும் ஆஸ்திரேலியா அணியின் அணுகுமுறை பற்றி பேசிய அவர் ” நாங்கள் முழுவதுமான தாக்குதல் பானி ஆட்டத்தில் இறங்கி விட்டோம். அப்படி செய்திருக்கக் கூடாது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் எங்களின் ஆதிக்கமே இருந்தது. எங்களுடைய தவறான அணுகுமுறையால் அது எதிரணியின் வசம் சென்று விட்டது. சுழல் பந்துவீச்சிக்கு எதிராக ஆட்டத்தை துவங்குவது கடினமானது. ஒவ்வொரு பந்துவீச்சுக்கும் ஏற்றவாறு நம்மை தகவமைத்துக் கொண்டு முனைப்புடன் ஆட வேண்டும். நம்மை வீழ்த்த நினைக்கும் பந்துவீச்சாளரின் திட்டங்கள் பலிக்காது என்பதை ஒவ்வொரு பந்திலும் நினைவுப்படுத்திக் கொண்டு ஆட வேண்டும்” என்று கூறினார்.

- Advertisement -

இது பற்றி தொடர்ந்து பேசிய ஸ்மித் ஆஸ்திரேலியா அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பினை தவறவிட்டதாக தெரிவித்தார். இரண்டாவது நேர ஆட்ட நேரம் முடிவில் 62 ரன்கள் முன்னிலையில் இருந்த ஆஸ்திரேலியா அணி இந்திய அணிக்கு 115 ரன்கள் மட்டுமே வெற்றி இலக்காக நிர்ணயித்தது. மூன்றாவது நாள் ஆட்டத்தில் தங்களின் மோசமான பேட்டிங்கினால் தங்களது வெற்றி வாய்ப்பு இழந்ததாக கூறிய ஸ்மித் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நிச்சயமாக வெற்றி பெறப் போராடுவோம் என தெரிவித்தார்.