“ரோகித் சூப்பர் ஓவரில் செய்த அந்த விஷயம் அஸ்வின் லெவல் திங்கிங்” – ராகுல் டிராவிட் பேட்டி

0
1515
Dravid

இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் தோல்விக்குப் பிறகு, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கு இந்திய அணியுடன் சென்றார்.

இதற்கு அடுத்து தற்பொழுது அவர் இந்தியாவில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு உள்நாட்டுக்கு திரும்பினார்.

- Advertisement -

இன்று தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இரண்டு சூப்பர் ஓவர்களை சந்தித்து, பார்த்தவர்களுக்கு மட்டும் இல்லாமல் விளையாடிய வீரர்களுக்கும் வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது.

மேலும் இந்த போட்டியில் களத்திற்கு வெளியே ராகுல் டிராவிட்டின் பங்கும் நிறைய இருந்தது. அவர் இந்த போட்டியை வெற்றி தோல்வி தாண்டி மிகவும் அனுபவித்து பார்த்துக் கொண்டிருப்பதை தொலைக்காட்சியில் பார்க்க முடிந்தது.

இந்த போட்டிக்கு குறித்தும் இந்திய அணி குறித்தும் பேசி உள்ள ராகுல் டிராவிட் “இது கிரிக்கெட்டின் சிறந்த போட்டி. அருமையான விளையாட்டு தொடர்ந்து சென்றது. பார்ப்பதற்கு அருமையான பேட்டிங் கிடைத்தது. எங்கள் பக்கத்தில் ரோகித் ரிங்கு சிங் இருந்தார்கள். அவர்கள் பக்கத்திலும் ஹிட்டிங் சிறப்பாக இருந்தது. உண்மையிலேயே டி20 கிரிக்கெட் ஹிட்டிங் சிறப்பாக இருக்கிறது.

- Advertisement -

ரவி பிஷ்னாய் அந்த குறிப்பிட்ட இரண்டு பந்துகளை மிகச் சரியாக தரை இறக்கி எங்களுக்கு வெற்றியை கொண்டு வந்தது மிகவும் நல்லது. எங்களுடைய பவுலிங் யூனிட் மிகவும் இளமையான, அனுபவம் குறைவானது. நேர்மையாக அவர்கள் இந்த போட்டியை அனுபவித்து விளையாடி இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

ரோகித் இன்று மிகவும் புத்திசாலித்தனமாக இருந்தார். இன்று முதல் சூப்பர் ஓவரில் அவர் ரிட்டையர்டு ஹர்ட் ஆனது அஸ்வின் லெவல் திங்கிங். அவர் என்ன மாதிரியான ஒரு கிளாஸ் பிளேயராக இருக்க முடியும் என்பதை காட்டினார். எங்களுடைய பேச்சு எப்பொழுதும் பாசிட்டிவாகவே இருந்தது.எங்களுக்கு ஒரு பெரிய ஸ்கோர் தேவை என்று தெரியும். ரோகித் வைத்திருக்கும் ஹிட் மற்றும் ஷாட்ஸ் ரேஞ்ச் பெரிய அளவிலானவை.

ரோகித் மற்றும் விராட் கோலி இருவரையும் திரும்ப அணியில் பார்ப்பது நல்ல விஷயம். அவர்கள் அணிக்கு நிறைய விஷயங்களை கொண்டு வருகிறார்கள்.

தற்பொழுது நாங்கள் வீரர்களிடம் ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் விளையாடி ஸ்கொயர் பகுதிகளை ஓபன் செய்து ரன்கள் எடுப்பது எப்படி என்பது குறித்து பேசி வருகிறோம். ரோகித் இந்த விஷயத்திலும் முன்னின்று விளையாடுகிறார்.

ரிங்கு சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்து சில மாதங்கள்தான் ஆகிறது. அவரிடம் அமைதியும் முதிர்ச்சியும் மிகச் சிறப்பாக இருக்கிறது. அவர் உள்ளே வந்து முதலில் பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி இறுதியில் அதிரடியாக முடிப்பதை பார்க்கிறோம். அவருக்கு அவருடைய பலம் மற்றும் அவர் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து மிகத் தெளிவாக தெரியும்” கூறியிருக்கிறார்.