சஞ்சு, நீ ரஷித் கானை ஹாட்ரிக் அடிச்ச உடனேயே நம்ம தான் ஜெயின்போம்ன்னு எனக்கு நம்பிக்கை வந்துருச்சு – ட்ரெஸ்ஸிங் ரூமில் பாரட்டிய கோச் சங்கக்காரா!

0
585

குஜராத் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது என்றால், அதற்கு முதல் காரணம் சஞ்சு சாம்சன் அடித்த அந்த ஹாட்ரிக் சிக்ஸர் தான். அதுதான் திருப்புமுனையாக அமைந்தது என்று டிரெஸ்ஸிங் ரூமில் பாராட்டியுள்ளார் குமார் சங்கக்காரா.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பவுலிங் செய்து 185 ரன்கள் அடித்தது. இந்த ஸ்கோரை சேஸ் செய்து வெற்றி பெறுவதற்கு களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு வரிசையாக விக்கெட்டுகள் சரிந்து கொண்டே இருந்தன. அணிக்கு ரன்களும் வரவில்லை. இதனால் 12 ஓவர்கள் முடிவில் 66 ரன்களுக்கு நான்கு விக்கெடுகளை இழந்து களத்தில் தடுமாறி வந்தது.

- Advertisement -

சஞ்சு சாம்சன் மற்றும் சிம்ரன் ஹெட்மயர் இருவரும் களத்தில் இருந்தனர். அந்த நேரத்தில் நம்பர் ஒன் டி20 பவுலர் ரஷித் கான் 13ஆவது ஓவரை வீசினார். அப்போது பேட்டிங்கில் இருந்த சஞ்சு சாம்சன் அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்கள் விலாசி ராஜஸ்தான் அணியை முன்னிலைப்படுத்துவதற்கு ஆரம்பப் புள்ளியை வைத்தார்.

அதன் பிறகு ஆட்டம் மொத்தமாக ராஜஸ்தான் அணியின் பக்கம் திரும்பியது. அதிரடியாக ஆடிய சஞ்சு சாம்சன் 32 பந்துகளில் 60 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தாலும், களத்தில் இருந்த சிம்ரன் ஹெட்மயர் இறுதிவரை நின்று 26 பந்துகளில் 56 ரன்கள் அடித்துப் போட்டியை முடித்துக் கொடுத்தார். ராஜஸ்தான் அணி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டி முடிந்த பிறகு டிரெஸ்ஸிங் ரூமில் வீரர்கள் அனைவரையும் அழைத்துப் பேசிய கோச் குமார் சங்கக்காரா, வெற்றிக்கு சஞ்சு சாம்சன் தான் காரணம் என்றார். அவர் பேசியதாவது:

- Advertisement -

“நாம் சற்று பின்னடைவாக இருந்தபோது, ரஷித் கான் ஓவரில் சஞ்சு சாம்சன் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்தது போட்டிக்கு திருப்புமுனையாக அமைந்தது. நம்பர் ஒன் டி20 பவுலராக இருந்தாலும் நாம் ஆட்டத்திற்குள் இருந்தால் எந்த ஒரு டார்கெட்டையும் சேஸ் செய்ய முடியும் என்பதை காட்டிவிட்டார். நாம் ஆட்டத்திற்குள் இருந்தால் எப்பேர்ப்பட்ட பௌலர்களாக இருந்தாலும், ஷேன் வார்னே அல்லது முத்தையா முரளிதரன் போன்ற உலகத்திலும் மிக்கவர்களாக இருந்தாலும் கவலை இல்லை. நமது ஆட்டத்தை வெளிப்படுத்தினாலே போதும் என்பதை காட்டிவிட்டார். சஞ்சு சாம்சன்-க்கு என்னுடைய பாராட்டுக்கள். இதிலிருந்து இளம் வீரர்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.” என்றும் பேசினார்.