அடிச்சு சொல்றேன்.. என் 563 விக்கெட் சாதனை இந்த பவுலர் முறியடிப்பார்.. கிளன் மெக்ராத் உறுதியான கணிப்பு

0
14041

1990களில் ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்துவீச்சைப் போல் உலகில் எந்த அணியிடமும் அப்படி ஒரு வேகப்பந்து வீச்சுக் கூட்டணியைப் பார்க்க முடியாது. அதில் முக்கியமான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் கிலென் மெக்கராத். இவரது வேகப்பந்து வீச்சுக்குத் தடுமாறாத பேட்ஸ்மேன்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இவரிடத்தில் வேகமும்,துல்லியமும் மிக சிறப்பாக இருக்கும்.

இந்த ஆஸ்திரேலியா ஜாம்பவான் இதுவரை 124 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 563 விக்கெட்டுகளை எடுத்து வலது கை வேகப் பந்துவீச்சாளர்களில் அதிக விக்கெட் எடுத்தவராக இருக்கிறார். சமீபத்தில் ஆஸ்திரேலியா அணியின் நாதன் லயன் பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட் என்று மயில்கல்லை எட்டியுள்ளார்.

- Advertisement -

சமீபத்தில் கிலென் மெக்ராத் அறக்கட்டளையின் பதினாறாவது ஆண்டு பிங்க் டெஸ்ட் போட்டியில் நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். 53 வயதான மெக்ராத் சமீபத்தில் நாதன் லியோனின் சிறப்பாக பந்து வீசும் திறமையை வெகுவாகப் பாராட்டி உள்ளார். அவர் நீண்ட காலம் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடினால் பல்வேறு சாதனைகளை முறியடிக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

நாதன்யன் இதுவரை 124 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 505 விக்கட்டுகளை எடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் மிக முக்கியமான சுழற் பந்து வீச்சாளராக இருக்கும் நாதன் லயன் இன்னும் பல்வேறு சாதனைகளை டெஸ்ட் கிரிக்கெட்டில் படைக்க முடியும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து கிளன் மெக்ராத் கூறுகையில்,
” என்னைப் பொறுத்தவரை சாதனைகள் என்பது முறியடிக்கப்படுவதற்கு தான் உள்ளன. நவீன கால கிரிக்கெட் வீரர்கள் இதனை சிறப்பாக செய்து வருகின்றனர். சமீபத்தில் நாதன் லயன் 500 டெஸ்ட் விக்கட்டுகளை எடுத்துள்ளார். அவரின் வளர்ச்சி மிக அபாரமானதாக உள்ளது. மேலும் அவர் என் சாதனையை முறியடித்தால் அவருக்கு பெருமையாக இருக்கும்.

- Advertisement -

அவர் மிகச் சிறப்பான வாழ்க்கையை தற்போது பெற்றுள்ளார். அவருக்கு என் நல்வாழ்த்துக்களை நான் கூறிக் கொள்கிறேன். ஒரு வேகப்பந்து வீச்சாளராக நான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளேன். இதனால் அதில் சற்று என் கை ஓங்கி உள்ளது. லயன் இன்னமும் அதிக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடினால் ஷேன் வார்னேவின் 708 விக்கட்டுகளை அவரால் முறியடிக்க முடியும். அவரது ஆட்டம் நன்றாக உள்ளது. பேட்ஸ்மேன்களின் விக்கட்டை வீழ்த்துவது பற்றிய அவர் நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்” என்று கூறி இருக்கிறார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. ஏற்கனவே ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. நாதன் லயன் இந்த டெஸ்டிலும் சிறப்பாக செயல்படுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.