நன்றி மறவாத குட்டி மலிங்கா.. இலங்கையிலும் தோனி புகழ் பாடும் பதிரனா.. தோனியின் வளர்ப்பு என்றால் சும்மாவா!

0
3395
Pathirana

ஐபிஎல் தொடரில் முதன் முதலில் 2020 ஆம் ஆண்டு ப்ளே ஆப்ஸ் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ஐபிஎல் வரலாற்றில் முதல் மோசமான தகவலைப் பதிந்தது!

ஆனால் 2022 ஆம் ஆண்டு அதைவிட மோசமான ஒரு ஆண்டாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பதிவானது. அந்த வருட ஐபிஎல் தொடரில் மொத்தம் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று, புள்ளி பட்டியலில் 10 அணிகள் பங்குபெற்ற தொடரில் ஒன்பதாவது இடத்தையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் பிடிக்க முடிந்தது!

- Advertisement -

அந்த ஆண்டு நடந்த மெகா ஏலத்தில் முடிந்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வலிமையாகவே கட்டமைக்கப்பட்டது. ஆனாலும் வேகப்பந்துவீச்சுத் துறையில் தீபக் சகர் மற்றும் ஆடர் மில்னே இருவரும் கிடைக்காமல் போனது, மும்பையில் வைத்து நடத்தப்பட்ட ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய மோசமான பின்னடைவை உருவாக்கியது.

இந்த நிலையில்தான் இலங்கையைச் சேர்ந்த 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட்டில் விளையாடிய, வேகபந்துவீச்சில் மலிங்கா போல் ஸ்லிங் ஆக்சன் கொண்டுள்ள மதிஷா பத்திர நாவை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் ஆடம் மில்னேவுக்கு பதிலாக கொண்டு வந்தது.

மேலும் இந்த வருட ஐபிஎல் தொடரில் அவரை தங்கள் அணியின் நிரந்தர வீரராக வைத்துக் கொண்டது. அவரும் அணிக்கு எதிர் பார்த்தப்படியே நல்ல செயல்பாட்டை பந்துவீச்சில் கொடுத்தார். மேலும் அவருடைய உருவாக்கத்தில் மகேந்திர சிங் தோனியின் பங்கு பெரும் அளவில் இருந்தது. அதை களத்தில் நேரடியாகவே பார்க்க முடிந்தது. அவர் எதிர்காலம் எப்படி அமைய வேண்டும் என்று ஒரு போட்டி முடிந்ததற்கு பின்னால் மகேந்திர சிங் தோனி அவ்வளவு தெளிவாக பேசியும் இருந்தார். அந்த அளவிற்கு அவர் பதிரனா மேல் அக்கறை காட்டினார்.

- Advertisement -

இந்த நிலையில் தற்பொழுது இலங்கையில் ஐபிஎல் தொடர் போல எல்பிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் நிரோஷன் டிக்வெல்லா தலைமையிலான கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கு பதிரனா விளையாடி வருகிறார். மேலும் இந்தத் தொடரில் தற்பொழுது அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளராக 12 விக்கெட் வீழ்த்தி முன்னணியில் இருக்கிறார்.

தன்னுடைய இந்த மிகச் சிறப்பான செயல்பாட்டுக்கு மகேந்திர சிங் தோனி மிகவும் முக்கியமான காரணமாக விளங்கி இருக்கிறார் என்று நன்றி மறவாமல் தன்னுடைய நாட்டிலும் நினைவுகூர்ந்து பேசியிருக்கிறார். மகேந்திர சிங் தோனி தன்னை எந்த விதத்தில் உருவாக்கினார் என்பது குறித்தும் கூறி இருக்கிறார்.

இதுகுறித்து பேசி உள்ள மதிஷா பதிரனா
“அந்தத் தகுதி உள்ள ஒருவர் நம் மீது நம்பிக்கை வைக்கும் பொழுது, அது அபரிமிதமான நம்பிக்கையை நம் மீது நமக்கு ஏற்படுத்துகிறது. தோனி அவர்களின் நம்பிக்கை மற்றும் ஆதரவால் நான் மட்டுமல்ல எல்லோருமே ஈர்க்கப்பட்டு இருக்கிறோம்!” என்று கூறி இருக்கிறார்.

அவருடைய பேச்சில் மிக குறிப்பாக, எந்த ஒரு டி20 போட்டியிலும் எப்படி சிறப்பாக இருப்பது? ஓவர்களை எப்படி திறமையாக நிர்வகிப்பது? என்று இதைப் பற்றிய மதிப்புமிக்க அறிவை தமக்கு தோனியே வழங்கி இருப்பதாக கூறியிருக்கிறார். கிட்டத்தட்ட அவர் தன்னுடைய குருவாக அவரை கருதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது!