தல தோனியின் மகத்தான ரெக்கார்டு.. முறியடித்த கேஎல்.ராகுல்.. தொட்டதெல்லாம் பொன்னாகும் கேப்டன்சி!

0
515
Dhoni

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் இந்திய அணி தற்போது தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான டி20 தொடர் சமனில் முடிந்ததை அடுத்து இரு அணிகளுக்கிடையே ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நேற்று நடந்தது. முதலில் தென்னாபிரிக்கா பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

- Advertisement -

தென்னாபிரிக்க அணி தான் எடுத்தது தவறான முடிவு என்று அப்போது சிந்திக்கவில்லை போலும்.
இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது அபார பந்துவீச்சினை வெளிப்படுத்தினார்.
இன்னிசை தொடங்கிய தொடக்க வீரர் ஹென்றிக்ஸ் தான் சந்தித்த எட்டாவது பந்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டோனி டி ஜார்ஜி சிறிது நேரம் தாக்குப்பிடித்து 28 ரன்கள் குவித்தார்.

அவரும் அவுட் ஆகி வெளியேற, பின்னால் வந்த வீரர்கள் மள மளவென விக்கெட்டுகளை இழக்க, பெகில்வாயோ மட்டுமே சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடி 33 ரன்கள் குவித்தார். அவருக்கு எந்த வீரரும் சரியான ஒத்துழைப்பை வழங்கவில்லை. இதனால் தென் ஆப்பிரிக்க அணி 116 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களும் இழந்து ஆல் அவுட் ஆனது.

இந்திய அணி தரப்பில் அர்ஸ்தீப் 5 விக்கெட்டுகளையும் ஆவேஸ் கான் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தென்னாபிரிக்க அணியை 28 ஓவர்களுக்குள்ளேயே முடித்து ஆல் அவுட் ஆக்கினர். இதனைத் தொடர்ந்து 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

- Advertisement -

ருத்ராஜ் 5 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சாய் சுதர்சன் தனது அறிமுக போட்டியிலேயே அரை சதம் கடந்து அசத்தினார். அவருக்கு ஸ்ரேயாஸ் ஐயர் நல்ல பார்ட்னர்ஷிப் கொடுக்க இந்திய அணி 17 ஓவர்களிலேயே 117 ரன்களைக் குவித்து அபார வெற்றி பெற்றது. சாய் சுதர்சன் 55 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 52 ரன்களும் குவித்தனர்.

இதன் மூலம் கே.எல் ராகுல் சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளைப் பெற்றதன் மூலம், எம்எஸ் தோனியின் சாதனையை முறியடித்து அதிக போட்டிகளில் தொடர்ச்சியாக வென்ற இந்திய கேப்டன்களின் பட்டியலில் இணைந்தார். ரோஹித் சர்மா 19 போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் இடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து விராட் கோலி 12 வெற்றி பெற்றுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 9 போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். இதன் மூலம் கே.எல். ராகுல், எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்து ஒரு படி மேலே சென்றுள்ளார். தொடர்ச்சியாக அதிக போட்டிகளை வெற்றி பெற்ற இந்திய கேப்டன்களின் பட்டியல் பின்வருமாறு :

19 போட்டிகள் – ரோஹித் சர்மா (2019/22)

12 போட்டிகள் – ரோஹித் சர்மா (2018)

12 போட்டிகள் – விராட் கோலி (2017)

10 போட்டிகள் – ரோஹித் சர்மா (2023)

10 போட்டிகள் – KL ராகுல் (2022/23)*

9 போட்டிகள் – எம்எஸ் தோனி (2013)