சொல்லிவச்சு அடிச்சாரு… அடிக்க துவங்குவதற்கு முன் ஷர்துல் தாக்கூர் என்னிடம் சொன்ன விஷயம் – ரிங்கு சிங் பேட்டி!

0
884

இருவரும் பார்ட்னர்ஷிப் அமைப்பதற்கு முன்னர், நான் சான்ஸ் எடுக்கிறேன் என்று கூறிவிட்டு தான் அதிரடியாக விளையாடினார். மேலும் இருவரும் என்னென்ன பேசிக்கொண்டார்கள் என்பதை கூறியுள்ளார் ரிங்கு சிங்.

ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 89 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகள் இழந்து பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டது. அந்த சமயத்தில் ரிங்கு சிங் களத்தில் நின்றார். உள்ளே வந்த சர்துல் தாக்கூர், வந்த முதல் ஓவரிலிருந்து வெளுத்து வாங்க ஆரம்பித்தார்.

- Advertisement -

அணியின் ஸ்கொர் மேலே உயர்ந்து கொண்டே இருந்தது. சர்துல் தாக்கூர் 20 பந்துகளில் அரைசதம் கடந்து 19ஆவது ஓவரில் இழந்தபோது, 29 பந்துகளில் 68 ரன்கள் அடித்திருந்தார். ஆட்டத்தில் பல்வேறு திருப்பங்கள் நிகழ்த்திவிட்டு சென்றார்.

89 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் இருந்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 204 ரன்கள் அடித்தது. பின்னர் பவுலிங்கில் கொல்கத்தா அணியின் ஸ்பின்னர்கள் அசத்தியால், ஆர்சிபி அணி 123 ரன்களுக்கு சுருண்டது. 81 ரன்கள் வித்தியாசத்தில் அவ்வாறு வெற்றியும் பெற்றது.

ஆறாவது விக்கெட்டிற்கு ரிங்கு சிங்-சர்துல் தாக்கூர் பார்ட்னர்ஷிப் அமைத்து 103 ரன்கள் சேர்த்தனர். இதுதான் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு முக்கிய திருப்புமுனையாகவும் அமைந்தது. போட்டி முடிந்த பிறகு சர்துல் தாக்கூர் உடன் பார்ட்னர்ஷிப் அமைத்தது பற்றி பேசிய ரிங்க்கு சிங் கூறுகையில்,

- Advertisement -

“தாக்கூர் உள்ளே வந்தவுடன், ‘நீ விக்கெட் இழக்காமல் பார்த்துக்கொள். நான் அடித்து விளையாடி சான்ஸ் எடுக்கிறேன்’ என்றார் அதன்பிறகு நான் ஒரு முனையில் நிதானமாக விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டேன். வந்த முதல் பந்திலிருந்தே அடிக்கத் துவங்கியவர், அவுட்டாகும் வரை நிதானம் காட்டவே இல்லை..

பிட்ச் கொஞ்சம் ஸ்லோவாக இருந்தது. இதனால் பந்து பேட்டிற்கு வருவதை கணிக்க முடியாத அளவிற்கு இருந்தது. அப்படியான சூழலிலும் தாக்கூர் அதிரடியாக விளையாடி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டு சென்று விட்டார். இருவரும் திட்டத்தில் இறுதிவரை உறுதியாக நின்றோம். கடைசியில் ஓரிரு ஓவர்கள் மட்டுமே இருக்கிறது என்பதால் நானும் சான்ஸ் எடுத்து அடித்து விளையாடினேன்.” என்றும் கூறினார்.