டெஸ்ட் ரேங்கிங்.. மீண்டும் டாப் 10ல் கோலி.. பும்ரா சிராஜ் கடகட முன்னேற்றம்!

0
210
Virat

இந்திய அணி சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.

இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி, பேட்டிங் செய்ய கடினமான இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.

- Advertisement -

இந்த தொடருக்கு செல்வதற்கு முன்னால் இந்திய பேட்ஸ்மேன்கள் டெஸ்ட் தரவரிசையில் விராட் கோலி 13வது இடத்திலும், ரோகித் 10வது இடத்திலும், ஸ்ரேயாஸ் 39 வது இடத்திலும், கில் 53வது இடத்திலும், கேஎல்.ராகுல் 62வது இடத்திலும், ஜெய்ஸ்வால் 63வது இடத்திலும் இருந்தார்கள்.

தற்பொழுது இந்தத் தொடரின் முடிவுக்கு பின்னால் இந்திய டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது.

நீண்ட காலத்திற்குப் பிறகு விராட் கோலி முதல் 10 இடங்களுக்குள் வந்திருக்கிறார். தற்பொழுது விராட் கோலி 775 புள்ளிகள் உடன் ஆறாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். ரோகித் சர்மா 748 புள்ளிகள் உடன் பத்தாவது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார். இந்த இரண்டு இந்திய பேட்ஸ்மேன்கள் மட்டுமே டாப் 10ல் இருக்கிறார்கள்.

- Advertisement -

டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான முதல் 10 இடங்களில் கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுசேன், டேரில் மிட்சல், விராட் கோலி ஹாரி புரூக், பாபர் அசாம், உஸ்மான் கவஜா மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இருக்கிறார்கள்.

டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் இடத்தில் இருக்கிறார். ஜடேஜா நான்காவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு கீழே இறங்கி இருக்கிறார். பும்ரா 10வது இடத்தில் இருந்து நான்காவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். சிராஜ் 29ஆவது இடத்தில் இருந்து 17 வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.